தேசிய இனப் பிரச்சனையும் மலையகத் தமிழரின் சமூக உருவாக்கமும்

SamuthranPosted on February 3, 2021Categories பொது எல். சாந்திக்குமாரின் கருத்துக்கள் பற்றி ஒரு பார்வை சமுத்திரன் தோழர் சாந்திக்குமாரின் மரணச்செய்தியைக் கொழும்பில் வாழும் ஒரு நண்பர் மின்னஞ்சல் மூலம் தெரியத் தந்தார். நான் நீண்டகாலமாக சாந்திக்குமாருடன் தொடர்பில்லாது இருந்ததனால் எழுந்த மனவருத்தம் அந்த மரணச்செய்தி தந்த துக்கத்தை அதிகரித்தது. அத்தகைய நேரத்தில் கடந்தகால நினைவுகள் பல எழுவது இயற்கையே. அவரை முதலில் சந்தித்தது 1970களின் நடுப்பகுதியில் என நம்புகிறேன். கூர்மையான சமூகப்பார்வையும் அரசியல் ஆர்வமும் மிக்க ஒரு இளைஞனாகவிருந்தார். அப்போது நான்  கொழும்பில் வாழ்ந்துவந்தேன். அன்று ஏற்பட்ட தொடர்பு சில பொதுவான ஈடுபாடுகளால் தொடர்ந்தது. வளர்ந்தது. ஒரு மாக்சிசக் கல்வி வட்டத்தை உருவாக்குவதில் எனக்கு இருந்த ஆர்வத்தை அவரும் பகிர்ந்து கொண்டார். சாந்தியுடனும் வேறு சிலருடனும் சேர்ந்து ஒரு கல்வி வட்டத்தை ஆரம்பித்தோம். அதில் பலர் இணைந்தனர். மற்றையோர்…

Read More

போதைப்பொருள் கடத்தல்காரரின் மரணமும் ஜனநாயகத்தின் நிலையும்: புள்ளிகளை இணைத்தல்

பட மூலம், Ishara S. Kodikara/AFP Photo “… இறந்த நபர் (2020) செப்ரெம்பர் 18ஆம் திகதி அவரது வாழைத் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மீட்பதற்காக இரவு நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்படுகிறார். செல்லும் வழியில் (பொலிஸ் உத்தியோகத்தரின்) ரைபிளைப் பறிப்பதற்காக அவருடன் சண்டை செய்கிறார். இந்த சண்டையில் துப்பாக்கி வெடித்து உயிரிழக்கிறார்” – 2019 டிசம்பர் 17ஆம் திகதி தீர்மானிக்கப்பட்ட ரட்னாயக்க தரங்கா லக்மாலி எதிர் நிரோஷன் அபேகோன் வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் இருந்து ஒரு பகுதி. 2020ஆம் ஆண்டில் பொலிஸ் ‘துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்’ பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஐந்து பேர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. ஒருவர் பொலிஸின் தடுப்புக் காவலில் இருந்து தப்பியோடுகையிலும், இரண்டு பேர் போதைப்பொருட்கள் அல்லது ஆயுதங்களை மீட்பதற்காகக் கொண்டு செல்லப்பட்ட சமயம்…

Read More

மக்களுக்கான குறிப்புக்கள்: நான்கு தரப்புப் பொறி

சிறி லங்கா வெகுஜன முன்னணியிலான கூட்டரசாங்கம் எம்.சி.சி.(MCC) உடன் ஒப்பந்தம் கைச்சாத்திடுவது தொடர்பாக 2019 நவம்பர் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அறிவித்த தனது நிலைப்பாட்டிலிருந்து 180 பாகை திரும்புவதற்கு திட்டமிட்டுள்ளது. 20வது திருத்தத்தின் உள் நிர்வாகம் தொடர்பான முக்கிய பிரச்சனைகள் பற்றி பல விமர்சகர்கள் கேள்வி எழுப்பியிருந்த போதிலும் தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் எம்.சி.சி. உடனான அதன் சாத்தியமான இணைப்பு பற்றிப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டனர். எம்.சி.சி ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னுள்ள தடைகளை அகற்றுவதே 20வது திருத்தத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். 20வது திருத்தம், அரசியலமைப்பைப் பாவித்து சர்வாதிகாரப் பாதையைப் பலப்படுத்தும். இது ஒரு நீண்ட கால செயற்பாடு என்பது காலம் தாழ்த்தியேனும் பல பார்வையாளர்களால் வெளிப்படுத்தப் பட்டுள்ளது. கலாநிதி என்.எம்.பெரேரா. அபிவிருத்தி நடவடிக்கைக்கு ஒரு ஸ்திரமான அரசாங்கம் தேவை என்பதனால் சர்வாதிகாரப் பாதை நியாயப்படுத்தப்படுகிறது. பரவலான இக்…

Read More

கட்டூநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் ஊழியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்

அக்டோபர் 20, 2020 க .ரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் அலுவலகம் கொழும்பு 7. அன்புள்ள பிரதமர் கட்டூநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் ஊழியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் கோவிட் 19 இன் இரண்டாவது அலை அந்த தொழிற்சாலைகளில் பணிபுரியும் கட்டூநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களுக்கும், மண்டலத்தைச் சுற்றியுள்ள போர்டிங் ஹவுஸில் தங்கியிருக்கும் தொழிலாளர்களுக்கும் பரவியுள்ளதால், பல கடுமையான சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். 1. அப்பகுதியில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக, வேலைக்குச் செல்வோர் தவிர மற்ற அனைவருக்கும், அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்க கடைகளுக்குச் செல்ல முடியவில்லை. ஊரடங்கு உத்தரவு காரணமாக இப்பகுதியில் பல கடைகள் மூடப்பட்டுள்ளன. 2. இப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளின் நிர்வாகம் கோவிட் பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகளின் தொழிலாளர்களுடன் தங்கியுள்ள தொழிலாளர்களுக்கு வேலைக்கு அறிக்கை அளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. 3.…

Read More

காலக்கண்ணாடி – 04 (மீண்டும் இந்தியா..?)

—அழகு குணசீலன் — “மீண்டும் இந்தியா …?  மாலைபோடும் தமிழ்தேசியம். மருண்டோடும் சிங்களதேசியம்.”  “வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும், ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்!” – என்ற கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகளை நினைவூட்டும் அரசியல்.  இந்திய பிரதமர் மோடி ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ்மக்கள் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவத்துடன் வாழ்வதற்கான 13வது அரசியல் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று இலங்கை அரசைக் கோரியிருப்பது தான் இந்த மாலைக்கும் மருட்சிக்கும் காரணம்.  சிங்களதேசியத்தின்  சார்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ச பிடி கொடுக்காமல், பட்டும் படாமல் பதில் அளித்திருக்கிறார்.  அரசியல் யாப்பு திருத்தத்தின் மூலம் தமிழர்கள் உட்பட அனைத்து இனமக்களினதும் நலன் சார்ந்து மக்களால் ஏற்றுக்கொள்ள கூடிய தீர்வுநோக்கி செயற்படுவதாக அந்தப் பதில் அமைந்துள்ளது.  இதற்கிடையில் இந்திய நிலைப்பாட்டை இலங்கை அரசு புறக்கணிக்க முடியாது என்ற தொனியில் சம்பந்தர் கருத்து வெளியிட்டுள்ளார்.  இந்த முக்கோண அரசியல் சூழலில்….  காலக்கண்ணாடி…

Read More

இலங்கை அரசியலில் இடதுசாரிகளின் வகிபாகம் (முன்னைய கட்டுரைத் தொடர்ச்சி)

ஆங்கிலக் காலனித்துவ ஆட்சியினர் 1815ல் முழு நாட்டையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் பின்னர் படிப்படியாக அன்று வரை காணப்பட்ட இலங்கையின் தன்னிறைவுப் பொருளாதார நடைமுறையை மாற்றி இலங்கைத் தீவை தனது காலனித்துவப் பொருளாதாரச் சுரண்டலுக்கு ஏற்ற நாடாக (அதாவது நிலப்பரப்பாக) மாற்றியதுடன் குடிமக்களை அடிமைகளாகக் கருதி தனது நிர்வாகத்தை மேற் கொண்டு வந்தனர். அந்நியர் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை மக்கள் தங்களது தனித்துவம் கொண்ட பொருளாதார, அரசியல், சமூக, கலாச்சார சுதந்திரத்தை இழந்தவர்கள் ஆனார்கள். எனினும் அந்நியரின் ஆதிக்க சுரண்டல் ஆட்சி முறைக்கெதிரான கசப்புணர்வும் அதையொட்டிய எதிர்ப்புக்களும் மெல்ல மெல்ல உருவாகி 19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிகளில் சமய கலாச்சார வடிவங்களுக்கு ஊடாக வெளிப்படுத்தப்பட்டு வளர ஆரம்பித்திருந்தன.  இதே காலப் பகுதியில் மேலை நாடுகளில் ஏற்பட்ட முதலாளித்துத்தின் வளர்ச்சியும் அவற்றின் ஏகாதிபத்திய போக்குகளும் அந் நாடுகளுக்கிடையே…

Read More