இலங்கை அரசியலில் இடதுசாரிகளின் வகிபாகம்( தொடர்ச்சி )

தொழிலாளவர்க்க சர்வதேச நிறுவனமாக உருவாக்கப்பட்ட ‘கம்யூனிஸ்ட் அகிலம்’ என்ற சர்வதேச அமைப்பை மார்க்சும் ஏங்கெல்சும் வாழ்ந்த போது முதலாவது அகிலம் இரண்டாவது அகிலம் என்ற பெயரில் வழி நடத்தியிருந்தனர். அவர்களுக்குப் பின்னர் மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலத்தை லெனின் வழி நடத்திப் பின் ஸ்டாலின் அதற்குத் தலைமை வகித்தார். இக் காலப் பகுதியில் மார்க்சிய தத்துவார்த்தக் கொள்கை முரண்பாடு காரணமாக 1917ல் ருசியப் புரட்சியில் லெனினுடன் இணைந்து போராடிய ட்ரொஸ்கி மூன்றரவது அகிலத்தை நிராகரித்து வெளியேறிச் செயற்பட்ட பின்னணியில் 1938ல் பிரான்ஸ் நாட்டில் நான்காவது(கம்யூனிஸ்ட்) அகிலம் ஆரம்பிக்கப்பட்டது.  இதனுடைய தாக்கம் இலங்கையில் முதலாவது இடதுசாரி அமைப்பாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த லங்கா சம சமாஜக் கட்சிக்குள்ளும்(LSSP) ஏற்பட்டது. நான்காவது அகிலத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். வெளியேற்றப்பட்ட தோழர்கள் தங்களது மார்க்சிய-லெனினிசக் கொள்கையின் அடிப்படையில் செயற்பட்டு…

Read More

சிங்களவர்களும் சுதந்திரம் குறித்தான அவர்களின் அச்சமும்

20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கால அடிப்படைவாத பாதுகாவலர்களான அநகாரிக தர்மபால, ஏ.ஈ.குணசேகர மற்றும் சி.டபிள்யு.டபிள்யு. கன்னங்கர ஆகிய மூவரும் பழமைவாதத் தலைவர்களால் “செல்வாக்குக்கு உட்பட்டிருந்ததுடன், அவர்களே ஈற்றில் பிரித்தானியர்களிடமிருந்து ‘சுதந்திரத்திற்கு’ பேச்சுவார்த்தை நடத்தினர். சிங்களவர்களின் இதயம், ஆன்மா மற்றும் உடலாகவிருந்த 13ஆம் நூற்றாண்டின் ரஜரட்ட கலாசாரத்திலிருந்து விலகி அவர்கள் சுதந்திரத்திற்கு பதிலாக பாதுகாப்பு, மேன்நிலைக்கு பதிலாக நடுத்தரநிலை என்பவற்றுக்கு தங்களை சீரமைத்துக் கொண்டனர். காலனித்துவத்தின் தொடர்ச்சியான அழுத்தங்கள் வெளிப்பட்ட பின்னர் 18ஆம் மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் சிங்களவர்கள் ஒரு சுய தற்காப்புப் பொறிமுறையை உருவாக்கிக் கொண்டனர். நாம் 21ஆம் நூற்றாண்டுக்கு நகரும் பொழுது இந்தப் பொறிமுறை முழுமையான செயற்பாட்டில் இருக்கிறது. இது குறித்து அனைத்து இலங்கையர்களும் சிந்திப்பது மட்டுமன்றி தீவிரமாக மீளாய்வு செய்து கொள்ள வேண்டும். இவ்விதமாக, இந்தக் காலப் பகுதியில்  ஆன்மீக அல்லது பொருண்மை ரீதியாக…

Read More

‘மல்லிகை’ ஆசிரியர் டொமினிக் ஜீவா காலமானார்!

ஜனவரி 28, 2021 ழத்து சஞ்சிகையான ‘மல்லிகை’ ஆசிரியர் டொமினிக் ஜீவா தனது 94வது வயதில் இன்று (2021.01.28) கொழும்பில் காலமானார். டொமினிக் ஜீவா, ஒரு விளிம்புநிலை மனிதர், படிக்காத மேதை, சிறந்த மனிதாபிமானி, முற்போக்கு சிந்தனையாளர், தலை சிறந்த தமிழ் மொழி ஊடகவியலாளர், சிறந்த எழுத்தாளர், திறனாய்வாளர், சிறுகதையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி, உன்னதமான மேடைப்பேச்சாளர், கடின உழைப்பாளி, நவீன தமிழ் இலக்கியத்தின் வற்றாத ஜீவன் என பன்முக ஆளுமை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது 93வது பிறந்ததினத்தில், இவரைப்பற்றிய சுருக்கமான விளக்கங்களுடன் ‘தினகரன்’ பத்திரிகை 2020.01.29 அன்று வெளியிட்ட கட்டுரை நன்றியுடன் இங்கு மறுபிரசுரம் செய்யப்படுகின்றது. டொமினிக் ஜீவா ஈழத்து இலக்கிய இதழியல் சாதனையாளர். 1966 இல் ‘மல்லிகை’ எனும் சஞ்சிகையை ஆரம்பித்து 2012 நவம்பர்-_டிசம்பர் மாதம் வரை தொடர்ந்து பதிப்பித்தவர். 46 வருடங்கள் 401…

Read More

இலங்கை தமிழ் இலக்கியத் துறையின் “மக்ஸிம் கார்கி” டொமினிக் ஜீவா காலமானார்!

இலங்கை தமிழ் இலக்கதியத் துறையின் முன்னோடியான “மக்ஸிம் கார்கி” டொமினிக் ஜீவா நேற்று (28) காலமானார்.94 வயதுடை இந்த மூத்த எழுத்தாளர், ‘மல்லிகை’ என்ற பெயரில் தமிழ் முற்போக்கு இலக்கிய சஞ்சிகையொன்றை வௌியிட்டு தமிழ் வாசகர்களுக்கு இலக்கிய தாகத்தை ஏற்படுத்தியவராவார். ஒடுக்கப்பட்ட மக்களின் ஏழ்மை. வாழ்க்கையில் அவர்கள் படும் கஷ்டங்கள் மற்றும் தமிழ் சமூகத்தில் நிலவும் சாதிய ஒடுக்குமுறைகளை அடிப்படையாகக் கொண்டு பத்திரிகைகளுக்கு பல கட்டுரைகளை எழுதியதோடு, பல புனைக் கதைகளையும் எழுதியுள்ளார்.1960களில் ‘தண்ணீரும் கண்ணீரும்’ என்ற சிறுகதைத் தொகுப்பை வௌியிட்டு அரசின் சாகித்தி யபரிசையும் வென்றதோடு, தமிழ் இலக்கிய சமூகத்தின் பாராட்டுதலையும் பெற்றவராவார். சிங்கள எழுத்தாளர்களையும் அவர்களது ஆக்கங்களையும் தமிழ் சமூகத்திற்கு எடுத்துச் செல்வதில் வழிகாட்டியாக இருந்தார். கம்யூனிஸக் கட்சியின் உறுப்பினராகச் செயற்பட்ட அவர் இலங்கை தமிழ் இலக்கியத்தின் ‘மக்ஸிம் கோர்கி’ என அழைக்கப்பட்டார்.1983ல் யுத்தம்…

Read More

தொழிற்சங்க துறவி வி.கே வெள்ளையன் 49 வது நினைவு தினம் இன்று – சிறப்பு கட்டுரை

Bharati December 2, 2020  தொழிற்சங்க துறவி வி.கே வெள்ளையன் 49 வது நினைவு தினம் இன்று – சிறப்பு கட்டுரை எம்.ராமச்சந்திரன் (நோட்டன் பிரிட்ஜ்) பெருந்தோட்டத் துறை நாட்டின் அந்நிய முதலீட்டு வருவாயில் முதன்மைப் பெற்றிருந்த காலத்தில், அவ் வருமானத்தை ஈட்டித்தந்த தோட்டத் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்டு அரசியல் அனாதைகளாக, நியாயமாகக் கிடைக்க வேண்டிய தொழில் சார் நலவுரிமைகள் எதுவுமற்று வெறும் உழைப்பவர்களாக மட்டுமிருந்த நிலையை மாற்றியமைத்து பெருந்தோட்டத் துறை தொழிலாளர்கள் என்ற நிலைக்கு தொழிலாளர்கள் வாழ்வை மேம்படுத்தி, தொழிலாளர்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபகர் வீ.கே. வெள்ளையன். பொகவந்தலாவை முத்துலெட்சுமி தோட்டக் கங்காணி காளிமுத்து- பேச்சியம்மாள் தம்பதிகளுக்கு பிறந்த நான்காவது குழந்தையே வெள்ளையன். பெற்றோர்களால் அவரது தோற்றத்துக்கு பொருத்தமாக வைத்த பெயர் போன்றே வெள்ளையுள்ளமும் கொண்டிருந்தவர். தன்னுடைய ஆரம்பக் கல்வியை பொகவந்தலதாவை கெம்பியன்…

Read More

தேசிய கேள்வி

இலங்கை பல இன, பல மத நாடு. இலங்கை எவ்வாறு குடியேறியது என்பதில் வரலாற்றாசிரியர்கள் வேறுபடுகிறார்கள். இலங்கையின் அசல் மக்கள் தமிழர்கள் என்றும் நம்பப்படுகிறது. ஒரு தீவாக மக்கள் வெவ்வேறு நீரோடைகளிலும் வெவ்வேறு கோணங்களிலிருந்தும் வருவது இயல்பானது. அந்த நேரத்தில் நாட்டில் இருந்தவர்களைத் தவிர, இவர்களில் பெரும்பாலோர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருக்க வேண்டும். இவர்களில் சிலர் பரந்த சமுதாயத்துடன் ஒருங்கிணைந்திருக்கலாம். இந்த நபர்களிடையே தூரம் அதிகரிக்கும் போது, ​​சில பிரிவுகளும் தனித்தனி அடையாளங்களை உருவாக்கக்கூடும். மலாயா, கோரமண்டல் மற்றும் அரேபியர்கள் சில மக்கள் வசித்திருக்கும்போது இந்த நிலைமை மக்களின் கட்டமைப்பை மேலும் சிக்கலாக்கியது. இனவாதத்தின் பிறப்பு தமிழ் பேசும் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் பின்னர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஏகாதிபத்தியவாதிகளால் இலங்கையில் தோட்டத்திற்காக அழைத்து வரப்பட்டனர், ஆனால் அவர்கள் ஒரு தனி குழுவை உருவாக்கியதாக தெரிகிறது.…

Read More

ஒரு நிகழ்ச்சி நிரலற்ற இடதுசாரிகள்

1930ல் இருந்து குறைந்தது ஐந்து சகாப்தங்களாவது நமது நாட்டின் அரசியலில் இடதுசாரி இயக்கம் மிக வலுவான நீண்ட பங்களிப்பைக் கொண்டுள்ளது என்பது ஒழிவு மறைவானதல்ல. பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்திட மிருந்து இலங்கையை விடுவிப்பதற்கான போராட்டத்தில் இடதுசாரி இயக்கம் ஒரு முன்னோடியான பாத்திரத்தைக் கொண்டிருந்தது. சம சமாஜ இயக்கத்தின் ஆரம்பம்.  1930ல் ஆரம்பிக்கப்பட்ட ‘சூரியமல்’ இயக்கத்தின் பின் உருவான லங்கா சம சமாஜக் கட்சி ஒரு தெளிவான அரசியல் நிகழ்சி நிரலைக் கொண்ட இயக்கமாகும். பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்திடமிருந்து இலங்கையை விடுவித்தல்,  பூரண தேசிய சுதந்திரத்தை அடைதல், அனைவருக்கும் நியாயமான ஒரு சோசலிச சமுதாயத்தைக் கட்டியெழுப்ப உற்பத்தி மற்றும் விநியோகத்தை தேசிய உடைமையாக்குதல் என்பனவே அதன் ஸ்தாபகக் கொள்கைகளாகும். அதன் அடிப்படையில் துன்பப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் ஒரு இடைக்காலத் திட்டத்தையும் கொண்டு வந்தனர். மேலும் அவைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்துக்கு மக்களைத்…

Read More

இலங்கை அசியலில் இடதுசாரிகளின் வகிபாகம்

( முன்னையதின் தொடர்ச்சி) மார்க்ஸிய சிந்தாந்த அடிப்படையில் இலங்கையில் ஒரு சமத்துவ சமுதாயத்தை நிறுவுவது என்ற கருதுகோளுடன் 1935ல் உருவானதே ‘லங்கா சம சமாஜக் கட்சி’(ல.ச.ச.க.) ஆகும். கட்சியை ஆரம்பித்தவர்கள் அனைவரும் மார்க்ஸியக் கல்வியறிவு பெற்றவர்களே. இவர்கள் 1920களிலிருந்து இலங்கையில் அரசியல் போராட்டங்களிலும் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தவர்களே. இவற்றினூடாகப் பெற்றுக் கொண்ட அனுபவங்களே இவர்களை ஒரு கட்சி கட்டுவதற்கு தூண்டியிருந்தது. அதே சமயம் கட்சி தன்னை ஒரு வர்க்கப் போராட்டத்திற்கான சக்தியாக வெளிப்படையில் காட்டிக் கொள்ளவும் இல்லை. அன்றைய ஆங்கிலேய ஆட்சியின் கீழ் மக்கள் பலவிதமான அடக்குமுறைகளை அனுபவித்துக் கொண்டிருந்தனர். இக் கட்சியை உருவாக்கிய முன்னணித் தோழர்களில் ஒருவர் 1931ல் அரச சபைத் தேர்தலில் இடதுசாரி வேட்பாளராகப் போட்டியிட்டு உறுப்பினராகியிருந்தார். அரச சபையில் அந்நியராட்சியின் அநியாயங்களையும் அதன் கொடூரங்களையும் பகிரங்கப்படுத்திப் பேசி வந்திருந்தார். இந்தப் பின்னணியில் 18ஆம்…

Read More

13ஆம் திருத்தமும் தமிழரின் பரிதாப நிலையும் – கலாநிதி அமீரலி

கலாநிதி அமீரலி, மேர்டொக் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா சகுனம் பார்த்து, அதிஷ்டத்தை நம்பி வாழ்க்கையின் நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் ஒரு சமூகத்தில், அப்பாவியான இலக்கம் 13 ஒரு அபகீர்த்தி வாய்ந்ததென்று பலராலும் கருதப்படுவதால் அதனை உபயோகிப்பதை எவ்வாறாயினும் தவிர்க்கவே விரும்புவர். உல்லாச விடுதிகள் கூட தமது அறைகளுக்கு 13ஆம் இலக்கத்தைத் தவிர்த்தே வரிசைப்படுத்துவதும் உண்டு. இந்தத் துரதிஷ்டத்தினாற்தானோ என்னவோ அரசியல் ரீதியாக இலங்கைத் தமிழரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு யாப்புத் திருத்தத்துக்கும் இந்த எண்ணே கிட்டியுள்ளது. இது தமிழர்களுக்கோர் அபசகுனமா? அது ஒரு புறமிருக்க, இலங்கையின் இன்றைய அரசியற் சூழலில் அந்தத் திருத்தத்தின் ஆரம்ப கர்த்தாவான இந்தியாவுக்கும் அதனைச் செயற்படுத்த வேண்டிய இலங்கைக்குமிடையே வளர்கின்ற ராஜரீக, பொருளாதார உறவுகளுக்கு மத்தியில் இந்தத் திருத்தம் முற்றாக மறக்கப்பட்டு தமிழரைத் தவிக்க விடப்படும் ஓர் ஆபத்து எழுந்துள்ளதையே இக்கட்டுரை…

Read More

இன்றைய காலத்திற்கான ஜனநாயகத்தை உருவாக்குதல் ராஜினி திரணகம நினைவு தின உரையாடல்

ராஜினி திரணகம அவர்களின் 31 ஆவது நினைவு தினம் யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரி மண்டபத்தில் நேற்று (25.09.2020) நடைபெற்றது. ராஜினி திரணகம பெண்ணியல்வாதியாகவும், பல்கலைக்கழக ஆசிரியராகவும், மனித உரிமைகளுக்காக குரல்கொடுத்த ஒருவராகவும் இருந்தார். 1989 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்திற்கு முன்பாகவே சுட்டுக்கொல்லப்பட்டார். ராஜினி திரணகம் ஞாபகார்த்த குழுவினரும் சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியத்தினரும் இணைந்து இந்த நினைவு தினத்தை ஏற்பாடு செய்திருந்தனர். இன்றைய காலத்திற்கான ஜனநாயகத்தை உருவாக்குதல் என்ற கருப்பொருளிலே உரையாடல் இடம்பெற்றது.பேராசிரியர் தீபிகா உடகம, தயாபால திரணகம, பேராசிரியர் சாந்தா குமார் ஆகிய மூவரும் தமது கருத்துக்களை முன்வைத்தனர். இந்த நினைவு தின நிகழ்வை தலைமை தாங்கி நடாத்திய மகேந்திரன் திருவரங்கன் தனது தலைமை உரையில் தேர்தல் மூலமாக பெறப்படுகின்ற ஜனநாயம் சில சமயம் மக்கள் மத்தியிலே பிளவுகளையும், சமூகங்கள் தூரப்பட்டு போவதையும் ஒருவிதமான…

Read More