பிப்ரவரி 25 ஆம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது சர்வதேசத்தின் நிர்வாகக் குழு என்.எஸ்.எஸ்.பியை எஃப்.ஐ.யிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது. நான்காம் சர்வதேசம் ஒரு ட்ரொட்ஸ்கிச சர்வதேசமாகும், இது முதலாளித்துவ கட்சிகளுடனான கூட்டணிகளை முற்றிலும் எதிர்க்கிறது. இருப்பினும், நவ சமா சமாஜா கட்சி முதலாளித்துவ ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இது நான்காவது சர்வதேசத்தின் சர்வதேச கொள்கைக்கு முற்றிலும் முரணானது. கடந்த காலத்தில், லங்கா சம சமாஜா கட்சி ஆசியாவின் நான்காவது சர்வதேசத்தின் மிகப்பெரிய கிளையாக இருந்தது, இது இலங்கை சுதந்திரக் கட்சியுடன் கூட்டணியை உருவாக்க முடிவு செய்தபோது 1964 ஆம் ஆண்டில் நான்காம் சர்வதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்டது. கூட்டணி அரசியலை எதிர்ப்பதற்காக 1977 இல் நவ சமமா சமாஜா கட்சி அமைக்கப்பட்ட பின்னர், இது இதுவரை நான்காவது சர்வதேசத்தின் இலங்கைக் கிளையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டில், என்.எஸ்.எஸ்.பியின் பெரும்பான்மையானவர்கள் ஐ.தே.கட்சியை ஆதரிக்கும்…
Read MoreCategory: FEATURED
பணிநீக்கம் குறித்த தொழிலாளர் இழப்பீடு அதிகரித்துள்ளது.
சேவைகளை நிறுத்துதல் சட்டத்தின் கீழ் செலுத்த வேண்டிய அதிகபட்ச இழப்பீடு ரூ. 1,250,000.00 முதல் ரூ. 2‚500‚000.00. தொழிலாளர் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவுக்கு 2021 ஜனவரி 11 ஆம் தேதி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவின்படி தொழிலாளர் ஆணையர் ஜெனரல் 2021 பிப்ரவரி 25 அன்று ஒரு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். தொழிலாளர்கள் இழப்பீட்டை நீண்ட காலமாக அதிகரிக்க தொழிற்சங்கங்கள் முந்தைய அரசாங்கங்களிடமிருந்து கோரியிருந்தன. பணிநீக்கக் குறைந்த இழப்பீடு பணத்தொகை காரணமாக முதலாளிகள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வந்தனர்.
Read Moreஇலங்கை ஒற்றையாட்சி அரசின் தாளத்திற்கு ஆடும் வல்லாதிக்க நாடுகள்
ராஜபக்சக்களிடம் தோல்வியடைந்த இந்திய இராஜதந்திரம் பதிப்பு: 2021 பெப். 25 15:39 ஈழத்தமிழர் அரசியல் விடுதலை குறித்த பேச்சுக்களை இந்திய மத்திய அரசு கையில் எடுக்குமானால், சிங்கள ஆட்சியாளர்கள் அடங்கிப்போவதைத் தவிர அவர்களுக்கு வேறு மார்க்கம் இருக்காது. ஆனால் இந்தியா எப்போதுமே இலங்கையின் பக்கம் சார்ந்து செயற்படுவதால். இந்தியா ஒரு வல்லாதிக்க நாடு என்பதையும் கடந்து சிங்கள ஆட்சியாளர்கள் தன்னிச்சையாகவே செயற்படுகின்றனர். அவ்வப்போது இராஜதந்திர ரீதியாக அவமானப்படுத்தியுமிருக்கின்றனர். உதாரணங்கள் பல இருந்தும் கொழும்பில் இந்திய அப்பலோ மருத்துவமனை 2006 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் இலங்கை தனதாக்கிக் கொண்டதைப் பிரதானமாகக் கூறலாம். இந்தியாவோடு செய்யப்பட்ட பல சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகள் ரத்துச் செய்யப்பட்டமை பற்றிய உதாரணங்களும் உண்டு. இந்துமா சமுத்திரத்தில் இந்தியா ஒரு பிரதான நாடு. ஆனால் சீனா இந்துமா சமுத்திரத்தில் தன்னையும் ஒரு நாடாக…
Read Moreஉருவப்படங்களை ஏந்தி பேரணி வரும் அலை
படம்: The Indian Express இந்திய விவசாயிகள் போராட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட தங்கள் மகன்களின், கணவர்களின் உருவப்படங்களை ஏந்திக்கொண்டு பேரணி வரும் பெண்கள் இலங்கையில் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உருவப்படங்களை ஏந்திப்பேரணி வரும் பெண்களை நினைவுபடுத்துகின்றனர். கடந்த காலமும் நிகழ்காலமும் ஒரே விதமாகவே பெண்களை உபசரிக்கின்றன. இஸ்லாம் மத நம்பிக்கைக்கு எதிராக தகனம் செய்யப்பட்ட கொரோனா பாதித்து இறந்தவர்களின் உருவப்படங்களுடன் இலங்கைப் பெண்கள் வீதிகளில் பேரணி போவதும், தகனம் செய்யப்பட்ட உடல்களுக்கு ‘கபன்’ எனப்படும் தூய வெள்ளைத் துணியால் சுற்றி இறுதி மரியாதை செய்ய முடியாமல்போனதற்கான எதிர்ப்பை தங்கள் கைகளில் வெள்ளைக் கபன் துணிகளைக் கட்டிக் காண்பிப்பதும் நடந்த காலத்திலேதான் டெல்லி வீதிகளில் மூன்று புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக இடம்பெறும் போராட்டங்களில் பெண்களின் அரசியல் அணிதிரட்டல் மிக முக்கிய இடத்திற்கு வந்தது. கொரோனா பாதித்து…
Read Moreயாழ்ப்பாணக் கலாச்சார நிலைய மண்டபத்தை இராணுவம் கையேற்றல்: தமிழ்க் கலாச்சார மறுலர்ச்சியை சிங்கள இராணுவம் முன்னெடுப்பதா?
கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இந்திய அரசு, இலங்கை அரசு மற்றும் யாழ்ப்பாணம் மாநகராட்சி ஆகியவற்றுக்கு இடையேயான முத்தரப்பு ஒப்பந்தந்தின் கீழ் ரூ. 2000 மில்லியன் பெறுமதியான யாழ்ப்பாணக் கலாச்சார நிலைய மண்டபம் பரிசளிப்பாக கட்டிக் கொடுக்கப்பட்டிருந்தது. கட்டிடத் திறப்பு விழா இடம் பெற்று ஆறு மாதங்களாகியும் பராமாரிப்புக்கான நிதி இல்லாதபடியால் அது செயற்படவில்லை. ஆரம்பம் முதல் இறுதி வரை இது ஒரு மோசடியான திட்டமிடல் ஆகும். நிதியைச் சாக்காக வைத்து அதனை மூடி வைத்திருந்த இலங்கை அரசு திடீரென ஆச்சரியமூட்டும் வகையில் கலாச்சார மண்டபத்தை இராணுவம் செயற்படுத்துவதற்கான நிதியை ஒதுக்கியுள்ளது. தேசிய பாரம்பரிய கலை மற்றும் கிராமியக் கலை மேப்பாட்டு அமைச்சின் செயலாளர் எஸ்.டி.கோடிக்காரா புத்தசாசன மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் செயலாளருக்கு எழுதிய 26 ஜனவரி 2021 திகதியிடப்பட்ட கடிதத்தில் ‘தொழில்நுட்ப தேவைகளுக்கான…
Read MoreP2P போராட்டம் எதுவரைக் கொண்டு செல்லும்?
–தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ பொத்துவில் முதல் பொலிகண்டி வரை (P2P) போராட்டம், இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை மறுக்கவியலாது. இந்தப் போராட்டத்தின் முடிவைத் தொடர்ந்து, அரசியல்வாதிகள் இடையேயான பரஸ்பரக் குற்றச்சாட்டுகள், கருத்து மோதல்கள் ஒருபுறமும், இதற்கு யார் உரிமை கொண்டாடுவது என்பது, இன்னொரு புறமுமாக ஈழத்தமிழர் அரசியல் நகர்கிறது. இந்தப் போராட்டத்தில் உணர்வெழுச்சியோடு பங்குபற்றிய எல்லோருடைய கேள்வியும், அடுத்து என்ன என்பதே? இக்கேள்வி மிகவும் முக்கியமானது. இக்கேள்விக்கான பதிலைத் தேடுவதற்கு, இந்தப் போராட்டத்தின் போதும் அதன் பின்னரும், நடைபெற்ற நிகழ்வுகளை ஆழமாக நோக்க வேண்டியுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு மக்களின் ஆதரவு இருந்தது. அது நேரடியான பங்கேற்பு முதல், மனதளவிலான ஆதரவு வரைப் பலதரப்பட்டதாக இருந்தது. இது மக்கள் மத்தியில், ஒரு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இப்போது எம்முன், பல கேள்விகள் உள்ளன. இதை எவ்வாறு தக்கவைப்பது?இதற்கான…
Read Moreசுதந்திர வர்த்தக வலயமும் மனித வலுத் தொழிலாளர்களும் – சூழ்நிலை பற்றிய இற்றைப்படுத்தல் 3
11பெப்ரவரி2021 சுதந்திர வர்த்தக வலயமும் மனித வலுத் தொழிலாளர்களும் – சூழ்நிலை பற்றிய இற்றைப்படுத்தல் 3 லலான் ரப்பர் (பிரைவேட்) லிமிடெட் , பியகம தொழிலாளர்களின் வருடாந்த விடுப்பு இந்த வருடம் குறைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் நத்தார் பண்டிகை நாள் தொடக்கம் (கிறிஸ்துமஸ்) புத்தாண்டு வரை ஒவ்வொரு நாளும் வேலை செய்யவேண்டியுள்ளது. நான்கு கத்தோலிக்கத் தொழிலாளர்களுக்கு கிறிஸ்துமஸ் தினத்தன்று விடுப்பு வழங்கப்பட்டுள்ள அதேவேளை எஞ்சிய தமிழ், முஸ்லிம் மற்றும் பெளத்தத் தொழிலாளர்கள் அந்த நாளில் வேலை செய்ய வேண்டியிருந்தது. பொதுவாக வருடத்தின் இக்காலப் பகுதியில் வருடாந்தச் சம்பள அதிகரிப்புப் பற்றிய அறிவித்தலைத் தொழிற்சாலை வெளியிட்டிருக்கும் என்றும் ஆனால் இதுவரை (24 ஆம் திகதி வரை) அவ்வாறான அறிவித்தல் எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் தொழிலாளர்கள் குறிப்பிட்டனர். வருடாந்த விடுப்பு அதிகரிப்புப் பற்றியும் தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்படவில்லை. ஜனவரி 1 ஆம் திகதி மூன்று பௌத்த துறவிகளுக்குத் தொழிற்சாலை தானம்…
Read Moreபோராட்ட வழிக்குத் திரும்பும் தமிழ் மக்கள்
பெப்ரவரி 4ந் திகதிய போலிச் சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு எதிராகவும், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவித்தல், வடக்கு கிழக்கில் போரினால் இடம் பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்தல், காணாமல் போனவர்களைத் தேடுதல், போர்க் குற்றவாளிகளைத் தண்டித்தல் ஆகியவற்றை வலியுறுத்தியும் வடக்குக் கிழக்கில் பொத்துவிலில்(அம்பாறை) இருந்து ஆரம்பித்து பொலிகண்டி(யாழ்ப்பாணம்) வரை ஒரு பாரிய ஆர்ப்பாட்ட அணிவகுப்பு இடம் பெற்றுள்ளது. இப் போராட்டத்தைத் தடுக்க அரசாங்கம் பல இடங்களில் நீதிமன்றத் தடை உத்தரவுகளைப் பெற்றிருந்தும் அதனை செப்பு விலங்குகள் என்று கருதாத போராட்டக்காரர்கள் காவல்துறையினருடன் மோதியபடி வெற்றிகரமாக முன்னேறிச் சென்றுள்ளனர். சிவில் சமூக அமைப்புக்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த அணிவகுப்பில் பிரதான தமிழ் அரசியல் கட்சிகள் யாவும் கலந்து கொண்டிருந்தன. இதில் சிறப்பம்சம் யாதெனில் முஸ்லீம்களின் பெருவாரியான பங்களிப்பேயாகும். இந்த அம்சம் இலங்கையில் தேசியப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான மிகவும் சாதகமான ஒரு…
Read More‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ யாத்திரை உணர்த்தும் உண்மைகள் என்ன?
— வி. சிவலிங்கம் — கடந்த 03-02-2021 ம் திகதி கிழக்கு மாகாணத்திலிருந்து ஆரம்பமாகியுள்ள ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ என்ற யாத்திரை புதிய அத்தியாயத்தைத் தமிழ் அரசியலில் ஏற்படுத்தியுள்ளது. ஆரம்ப நிகழ்வுகளில் சகல சமூகங்களின் பங்களிப்பு உற்சாகம் தருகிறது. சமீப காலமாக கிழக்கு மாகாணத்தில் அரச ஆதரவுடன் புதைபொருள் ஆய்வு, தரிசுநில பயன்பாடு, விவசாய உற்பத்தி அதிகரிப்பு என்ற பெயர்களில் இடம்பெற்று வரும் ஆக்கிரமிப்பு என்பது சமான்ய மக்களின் வாழ்வின் அடிப்படைகளுக்கு அச்சுறுத்தலாக மாற்றம் பெற்று வருவதன் அறிகுறியாகவே உள்ளது. இப் பிரச்சனைகள் குறித்து அரசியல்வாதிகள் பாராளுமன்றத்திலும், ஊடகங்களிலும் பேசுவதன் மூலம் மாற்றங்கள் ஏற்பட்டுவிடாது என்ற உண்மையை மக்கள் தற்போது நன்கு உணர்ந்துள்ளதால்தான் நேரடி நடவடிக்கைகளில், போராட்டங்களை அவர்களே தமது கைகளில் எடுத்துள்ளனர். கிழக்கில் இருந்து வடக்கு நோக்கி பொதுவாகவே இப்போராட்டங்கள் முதலில் வடக்கில் ஆரம்பித்து அவை பின்னர்…
Read Moreசிங்களவர்களும் சுதந்திரம் குறித்தான அவர்களின் அச்சமும்
20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கால அடிப்படைவாத பாதுகாவலர்களான அநகாரிக தர்மபால, ஏ.ஈ.குணசேகர மற்றும் சி.டபிள்யு.டபிள்யு. கன்னங்கர ஆகிய மூவரும் பழமைவாதத் தலைவர்களால் “செல்வாக்குக்கு உட்பட்டிருந்ததுடன், அவர்களே ஈற்றில் பிரித்தானியர்களிடமிருந்து ‘சுதந்திரத்திற்கு’ பேச்சுவார்த்தை நடத்தினர். சிங்களவர்களின் இதயம், ஆன்மா மற்றும் உடலாகவிருந்த 13ஆம் நூற்றாண்டின் ரஜரட்ட கலாசாரத்திலிருந்து விலகி அவர்கள் சுதந்திரத்திற்கு பதிலாக பாதுகாப்பு, மேன்நிலைக்கு பதிலாக நடுத்தரநிலை என்பவற்றுக்கு தங்களை சீரமைத்துக் கொண்டனர். காலனித்துவத்தின் தொடர்ச்சியான அழுத்தங்கள் வெளிப்பட்ட பின்னர் 18ஆம் மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் சிங்களவர்கள் ஒரு சுய தற்காப்புப் பொறிமுறையை உருவாக்கிக் கொண்டனர். நாம் 21ஆம் நூற்றாண்டுக்கு நகரும் பொழுது இந்தப் பொறிமுறை முழுமையான செயற்பாட்டில் இருக்கிறது. இது குறித்து அனைத்து இலங்கையர்களும் சிந்திப்பது மட்டுமன்றி தீவிரமாக மீளாய்வு செய்து கொள்ள வேண்டும். இவ்விதமாக, இந்தக் காலப் பகுதியில் ஆன்மீக அல்லது பொருண்மை ரீதியாக…
Read More