அமெரிக்க வன்முறையின் வரலாறு

ஜனவரி 12, 2021 கேப்பிட்டலில் (Capitol) அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தூண்டியதைவிட இரத்தக்களரி நிரம்பிய, மிகவும் நாசகாரத்தன்மை கொண்ட பல அத்தியாயங்களைக் கொண்டிருப்பது அமெரிக்க வரலாறு. அமெரிக்காவின் பயங்கரமான கடந்த காலத்தைப் பற்றிய அறியாமையை வரலாற்றாசிரியர்கள் டபிள்யு.ஈ.பி. டுபோய்ஸ், ஜான் ஹோப் ஃப்ராங்க்ளின், ரிச்சர்டு ஹோஃப்ஸ்டேட்டர் (W.E.B. DuBois, John Hope Franklin and Richard Hofstadter) போன்றோர் நன்றாக ஆவணப்படுத்தியுள்ளனர். இந்த அறியாமை தற்போதைய நிகழ்வுக்குப் பிறகு வெளிப்படையாகத் தெரிந்தது. இந்த நாசகாரச் சம்பவமானது வழக்கத்துக்கு மாறான ஒன்றுதான் என்று தொலைக்காட்சியில் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். வேண்டுமென்றே மறக்கும் இந்தச் செயல் – அமெரிக்க அறியாமை என்ற தொன்மத்துடன் சேர்ந்து – பல்வேறு வகைகளிலும் ஆபத்தான ஒன்றாகத் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறது. தான் படுதோல்வியடைந்த ஒரு தேர்தலை உண்மையில் தான் வென்றிருப்பதாக அதிபர் வலியுறுத்துவதை, அதன் இணைநிகழ்வாக…

Read More