‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ யாத்திரை உணர்த்தும் உண்மைகள் என்ன?

 — வி. சிவலிங்கம் —   கடந்த 03-02-2021 ம் திகதி கிழக்கு மாகாணத்திலிருந்து ஆரம்பமாகியுள்ள ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ என்ற யாத்திரை புதிய அத்தியாயத்தைத் தமிழ் அரசியலில் ஏற்படுத்தியுள்ளது. ஆரம்ப நிகழ்வுகளில் சகல சமூகங்களின் பங்களிப்பு உற்சாகம் தருகிறது. சமீப காலமாக கிழக்கு மாகாணத்தில் அரச ஆதரவுடன் புதைபொருள் ஆய்வு, தரிசுநில பயன்பாடு, விவசாய உற்பத்தி அதிகரிப்பு என்ற பெயர்களில் இடம்பெற்று வரும் ஆக்கிரமிப்பு என்பது சமான்ய மக்களின் வாழ்வின் அடிப்படைகளுக்கு அச்சுறுத்தலாக மாற்றம் பெற்று வருவதன் அறிகுறியாகவே உள்ளது. இப் பிரச்சனைகள் குறித்து அரசியல்வாதிகள் பாராளுமன்றத்திலும், ஊடகங்களிலும் பேசுவதன் மூலம் மாற்றங்கள் ஏற்பட்டுவிடாது என்ற உண்மையை மக்கள் தற்போது நன்கு உணர்ந்துள்ளதால்தான் நேரடி நடவடிக்கைகளில், போராட்டங்களை அவர்களே தமது கைகளில் எடுத்துள்ளனர். கிழக்கில் இருந்து வடக்கு நோக்கி  பொதுவாகவே இப்போராட்டங்கள் முதலில் வடக்கில் ஆரம்பித்து அவை பின்னர்…

Read More