போராட்ட வழிக்குத் திரும்பும் தமிழ் மக்கள்

பெப்ரவரி 4ந் திகதிய போலிச் சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு எதிராகவும்,  அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவித்தல்,  வடக்கு கிழக்கில் போரினால் இடம் பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்தல்,  காணாமல் போனவர்களைத் தேடுதல்,  போர்க் குற்றவாளிகளைத் தண்டித்தல் ஆகியவற்றை வலியுறுத்தியும் வடக்குக் கிழக்கில் பொத்துவிலில்(அம்பாறை) இருந்து ஆரம்பித்து பொலிகண்டி(யாழ்ப்பாணம்) வரை ஒரு பாரிய ஆர்ப்பாட்ட அணிவகுப்பு இடம் பெற்றுள்ளது. இப் போராட்டத்தைத் தடுக்க அரசாங்கம் பல இடங்களில் நீதிமன்றத் தடை உத்தரவுகளைப் பெற்றிருந்தும் அதனை செப்பு விலங்குகள் என்று கருதாத போராட்டக்காரர்கள் காவல்துறையினருடன் மோதியபடி வெற்றிகரமாக முன்னேறிச் சென்றுள்ளனர். சிவில் சமூக அமைப்புக்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த அணிவகுப்பில் பிரதான தமிழ் அரசியல் கட்சிகள் யாவும் கலந்து கொண்டிருந்தன.  இதில் சிறப்பம்சம் யாதெனில் முஸ்லீம்களின் பெருவாரியான பங்களிப்பேயாகும். இந்த அம்சம் இலங்கையில் தேசியப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான மிகவும் சாதகமான ஒரு…

Read More