P2P போராட்டம் எதுவரைக் கொண்டு செல்லும்?

–தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ பொத்துவில் முதல் பொலிகண்டி வரை (P2P) போராட்டம், இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை மறுக்கவியலாது.  இந்தப் போராட்டத்தின் முடிவைத் தொடர்ந்து, அரசியல்வாதிகள் இடையேயான பரஸ்பரக் குற்றச்சாட்டுகள், கருத்து மோதல்கள் ஒருபுறமும், இதற்கு யார் உரிமை கொண்டாடுவது என்பது, இன்னொரு புறமுமாக ஈழத்தமிழர் அரசியல் நகர்கிறது. இந்தப் போராட்டத்தில் உணர்வெழுச்சியோடு பங்குபற்றிய எல்லோருடைய கேள்வியும், அடுத்து என்ன என்பதே? இக்கேள்வி மிகவும் முக்கியமானது. இக்கேள்விக்கான பதிலைத் தேடுவதற்கு, இந்தப் போராட்டத்தின் போதும் அதன் பின்னரும், நடைபெற்ற நிகழ்வுகளை ஆழமாக நோக்க வேண்டியுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு மக்களின் ஆதரவு இருந்தது. அது நேரடியான பங்கேற்பு முதல், மனதளவிலான ஆதரவு வரைப் பலதரப்பட்டதாக இருந்தது. இது மக்கள் மத்தியில், ஒரு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.  இப்போது எம்முன், பல கேள்விகள் உள்ளன.  இதை எவ்வாறு தக்கவைப்பது?இதற்கான…

Read More

சுதந்திர வர்த்தக வலயமும் மனித வலுத் தொழிலாளர்களும் – சூழ்நிலை பற்றிய இற்றைப்படுத்தல் 3

11பெப்ரவரி2021 சுதந்திர வர்த்தக வலயமும் மனித வலுத் தொழிலாளர்களும் – சூழ்நிலை பற்றிய இற்றைப்படுத்தல் 3 லலான் ரப்பர் (பிரைவேட்) லிமிடெட் , பியகம தொழிலாளர்களின் வருடாந்த விடுப்பு இந்த வருடம் குறைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் நத்தார் பண்டிகை நாள் தொடக்கம் (கிறிஸ்துமஸ்) புத்தாண்டு வரை ஒவ்வொரு நாளும் வேலை செய்யவேண்டியுள்ளது.  நான்கு கத்தோலிக்கத் தொழிலாளர்களுக்கு கிறிஸ்துமஸ் தினத்தன்று விடுப்பு வழங்கப்பட்டுள்ள அதேவேளை எஞ்சிய தமிழ், முஸ்லிம் மற்றும் பெளத்தத் தொழிலாளர்கள் அந்த நாளில் வேலை செய்ய வேண்டியிருந்தது. பொதுவாக வருடத்தின் இக்காலப் பகுதியில் வருடாந்தச் சம்பள அதிகரிப்புப் பற்றிய அறிவித்தலைத் தொழிற்சாலை வெளியிட்டிருக்கும் என்றும் ஆனால் இதுவரை (24 ஆம் திகதி வரை) அவ்வாறான அறிவித்தல் எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் தொழிலாளர்கள் குறிப்பிட்டனர். வருடாந்த விடுப்பு அதிகரிப்புப் பற்றியும் தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்படவில்லை. ஜனவரி 1 ஆம் திகதி மூன்று பௌத்த துறவிகளுக்குத் தொழிற்சாலை தானம்…

Read More