தென்னாப்பிரிக்க தொழிற்சங்க கூட்டமைப்பின் (SAFTU)தேசிய பணி மறுப்புக்கு ஆதரவளிக்கவும்!

“நாங்கள் போராடவில்லை என்றால் நாங்கள் இறந்துவிடுவோம்!”

“ஒவ்வொரு வேலைநிறுத்தமும் ஒரு அரசியல் வேலைநிறுத்தமே!”

2021 பிப்ரவரி 24 புதன்கிழமை நாட்டின் முக்கிய நகரங்களில் தென்னாப்பிரிக்க தொழிற்சங்க கூட்டமைப்பு-SAFTU(South African Federation of Trade Unions) ஒரு பணி பகிஸ்கரிப்பு மற்றும் இலக்கு வைக்கப்பட்ட மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. கோவிட் -19 தொற்றுநோயால் மோசமடைந்த ஒரு கடுமையான சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் ஆளும் வர்க்கமும் அதன் ANC அரசாங்கமும் தங்கள் செல்வத்தையும், இலாபத்தையும் பாதுகாப்பதற்காக தொழிலாள வர்க்கத்தின் மீது மேலும் கஷ்டங்களையும் துன்பங்களையும் சுமத்துவதில் உறுதியாக உள்ளன.

வளர்ந்து வரும் ஏற்றத்தாழ்வுகள், பணிநீக்கங்கள், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் பொதுமைப்படுத்தப்பட்ட வறுமைக்கு எதிராக தொழிலாள வர்க்கம் ஒன்றுபட்டு போராட வேண்டும் அல்லது பசி பட்டினி மற்றும் COVID-19 உள்ளிட்ட நோய்களால் மரணத்தை எதிர்கொள்ள வேண்டும்.சோசலிச புரட்சிகர தொழிலாளர் கட்சி -SRWP(Socialist Reolutionay Workers Party) பிப்ரவரி 24 அன்று திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கிறது. 

ங்களை அடக்கியொடுக்கிக் கொன்றுவிடும் இயக்கமற்ற ஊழல் மலிந்த இந்த முதலாளித்துவ அமைப்பின் நடைமுறைகளை சீர்குலைக்கும வகையிலான ஆர்ப்பாட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளை “போதும் என்பது போதும்” என்ற முழக்கங்களுடன் முன்னெடுக்க எங்கள் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் மற்றும் ஏனைய தொழிலாள வர்க்கத்தினர் அனைவரையும் அழைக்கிறோம். 

முதலாளித்துவ அமைப்பு என்பது தொற்றுநோய்!

சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுப்படி 2020 ஆம் ஆண்டில் உலகளாவிய வளர்ச்சி 3% வீழ்ச்சியடைந்தது. இது ” பெரும் மந்தநிலைக்குப் பின்னர் ஏற்பட்ட மோசமான மந்தநிலையாகவும், உலகளாவிய நிதி நெருக்கடியை விட மிக மோசமாகவும் இருந்தது.” ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட ஊதிய உயர்வுக்கு மேல் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அனைத்து பொதுத்துறை ஊழியர்களின் ஊதியங்கள் எவ்வாறு முடக்கப்படும் என்பதை கோடிட்டுக் காட்டும் தனது இடைக்கால செலவின கட்டமைப்பை நிதியமைச்சர் டிட்டோ மொபோனி(Tito Mboweni) விரைவில் செயல்படுத்தவுள்ளார். அடுத்த நான்கு ஆண்டுகளில் மேலும் R 300 பில்லியன் அரசு துறைகள், மாகாண மற்றும் உள்ளூர் அரசாங்கங்களிலிருந்து குறைக்கப்படும். வரிகள் R 40 பில்லியனுக்கும் அதிகமாக அதிகரிக்கும். இதன் பொருள், விலைகள் அதிகரிக்கும் போது அரசு ஊழியர்களின் ஊதியம் 2019 மட்டத்தில் இருக்கும். இது நம்மைத் தக்க வைத்துக் கொள்ளும் திறனைக் குறைக்கும். பொது சேவைகளுக்கான பட்ஜெட் குறைக்கப்பட்டு உழைக்கும் மற்றும் நடுத்தர வர்க்கங்களுக்கான வரி மசோதா அதிகரிக்கும் என்பதால் சேவை வழங்கல் மோசமடையும். இது தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் மீதான பாரிய தாக்குதல்!

முதலாளித்துவ வர்க்கம் நிச்சயமாக அவர்களின் அமைப்பின் நெருக்கடிக்கு தொற்றுநோயைக் குறை கூறும். பொருளாதார சரிவு ஏற்கனவே 2019 ல் தொடங்கியிருந்ததால் இது உண்மையல்ல. சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கம் உலகளாவிய வர்க்கப் போராட்டங்கள் மற்றும் மக்கள் எழுச்சிகளில் போராடியது. தென்னாப்பிரிக்க பொருளாதாரம் ஏற்கனவே மந்தநிலையில் இருந்தது. மற்றும் வேலை இழப்புகளை துரிதப்படுத்தியமையால் வேலையின்மை 30% ஐ தாண்டியது. தொற்றுநோய் மற்றும் முடக்குதல் இந்த முரண்பாடுகளை அதிகப்படுத்தியது. ஏனெனில் இது முதலாளித்துவ அமைப்பின் உண்மையான தன்மையை அம்பலப்படுத்தியது.

வெகுஜன ஊடகங்கள் அமைதியாக இருக்கும்போது உள்ளூர்மயமாக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்துள்ளது. ஜூலை 2020 இல்இ குறைந்தது 232 ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சராசரியாக ஒரு நாளைக்கு 8 ஆர்ப்பாட்டங்கள். இது ஜனவரி 2013 முதல் ஒரே மாதத்தில் பதிவு செய்யப்பட்ட மிக அதிகமான எண்ணிக்கை. சூழ்நிலையில் உள்ள அனைத்தும் அடுத்த காலகட்டத்தில் விரைவாக வர்க்கங்களுக்கு இடையில் ஏற்படக் கூடிய ஒரு தீர்க்கமான மோதலை சுட்டிக்காட்டுகின்றன. இது தவிர்க்க முடியாத ஒரு போர். ஆனால் அதிகபட்ச தாக்கத்தை உறுதிப்படுத்த இது ஒழுங்கமைக்கப்பட வேண்டும். 

தென்னாப்பிரிக்க தொழிற்சங்க கூட்டமைப்பின் (SAFTU) கோரிக்கைகளை ஆதரிக்க வேண்டும்!SAFTU கோரிக்கைகளை அவர்களின் ஆவணத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.  ஒப்புக்கொள்கிறோம். ‘இது மீண்டும் போராட வேண்டிய நேரம்! வேலைகளைப் பாதுகாப்போம்! வறுமையை முடிவுக்குக் கொண்டுவருவோம்!  எங்கள் சொந்த கட்சி ஆவணங்களிலிருந்து நாம் எமது உடனடி கோரிக்கைகளின் சுருக்கப்பட்ட தொகுப்பை முன்வைக்கிறோம்:

  1. உயிர்களைக் காப்பாற்ற மக்கள் தடுப்பூசிக்கான கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் செயல்படுத்தவும்!

சோதனை தடுப்பூசிகள் எவை என்பது பற்றிய வெளிப்படையான விஞ்ஞான புரிதலையும், அவை எவ்வாறு விநியோகிக்கப்படும் என்பதற்கான நேர அட்டவணையையும், தெளிவான திட்டத்தையும் கோடிட்டுக் காட்டும் தடுப்பூசி செயல் திட்டத்தை நாங்கள் கோருகிறோம்! நெறிமுறையாக சோதிக்கப்பட்ட, பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகளை இலவசமாக வழங்குங்கள்! அனைவருக்கும் உலகளாவிய தடுப்பூசி ஒன்றை உருவாக்க அனைத்து அறிவுசார் சொத்துரிமைகளும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்! ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் அனைத்து வேலையற்ற மக்களுக்கும் அரசாங்கம் இலவச முகமூடிகள் மற்றும் சானிடிசர்களை வழங்க வேண்டும்!

2. பணிநீக்கம் குறித்த தடை மற்றும் வேலையின்மைக்கு முடிவு!

கையில் உள்ள அனைத்து வேலைகளும் அனைத்து தொழிலாளர்களிடமும் ஊதிய இழப்பு இல்லாமல் பகிரப்பட வேண்டும்! அரசுத் துறையில் உள்ள அனைத்து வெற்றிடங்களையும் அரசாங்கம் உடனடியாக நிரப்ப வேண்டும். இதற்காக ஒரு பாரிய பொதுப்பணித் திட்டத்தை உருவாக்க வேண்டும். உணவு இறையாண்மையைப் பாதுகாக்க விவசாயம் மற்றும் மீன்பிடித்தலில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்! வேலையற்ற அனைவருக்கும்  அடிப்படை வருமான மானியமாக R 3500 வழங்கப்பட வேண்டும்! 

3. சுகாதார சேவைகள், உணவு, நீர், சுகாதாரம், தங்குமிடம், மின்சாரம் மற்றும் இணையத்திற்கான உரிமையை உத்தரவாதம் செய்யுங்கள்!ஊழல் மற்றும் திருட்டைத் தடுக்க அரசாங்கத்தால் திறம்பட இயங்கும் மற்றும் நம்பகமான தொழிற்சங்கம் மற்றும் சமூக அமைப்புகளால் மேற்பார்வையிடப்படும் ஒரு பெரிய அளவிலான உணவுத் திட்டத்தை நாங்கள் கோருகிறோம்.

அனைத்து தனியார் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நல நிறுவனங்கள் ஒரே தேசிய மேலாண்மை முறையின் கீழ் தேசியமயமாக்கப்பட வேண்டும். அரசாங்கம் உடனடியாக ஒழுங்கான மற்றும் உயர்தர PPE(Personal Protective Equipment) வழங்க வேண்டும். சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளை திருத்தம் செய்ய வேண்டும். தொற்றுநோயால் இழந்த சுகாதார ஊழியர்களின் இடங்களை  மாற்றீடு செய்ய வேண்டும். சுகாதாரத் துறையில் உள்ள அனைத்து காலியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். அனைத்து நீர் மற்றும் மின்சார வெட்டுக்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், தொழிலாள வர்க்க சமூகங்களுக்கான அனைத்து வாடகை, விகிதங்கள் மற்றும் மின்சார நிலுவைத் தொகையை ரத்து செய்ய வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம். அனைவருக்கும் ஒழுக்கமான மற்றும் வசதியான வீட்டை வழங்குவதற்கும், போதுமான மலிவான மின்சாரம், நீர் மற்றும் சுகாதாரத்தை வழங்குவதற்கும்  ஏதுவாக ஐந்து மில்லியன் வீடுகளை கட்டியெழுப்பத் தேவையான  பொதுப்பணிகளின் பாரிய திட்டத்தை உருவாக்குங்கள். அவுட்சோர்சிங் மற்றும் பொதுப்பணி தனியார்மயமாக்கல் ஆகியவற்றிற்கான ஒப்பந்தக் கோரல் முறையை நிறுத்துங்கள். அனைத்து சேவைகளையும் வழங்கக் கூடியதாக உள்ளூர் அரசாங்கத்தின் திறனை உருவாக்குங்கள்!

4. அனைவருக்கும் இலவச, தரமான, கட்டாய மற்றும் சமமான கல்விக்கான கோரிக்கை தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளின் சரியான கோரிக்கையாகவே உள்ளது. நிறவெறிக் கல்வியை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை தேசியமயமாக்குமாறு நாங்கள் கோருகிறோம்.

5. ஒரு சோசலிச தொழிலாளர் அரசை நோக்கிய ஒரு படியாக ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை அமைக்க உண்மையான ஜனநாயகத்திற்காக போராடுங்கள்.

முதலாளித்துவம் ஒரு ஊழல். முதலாளித்துவ முறைமை ஒரு திருட்டு நடவடிக்கை! தொழிலாள வர்க்கத்தின் உழைப்பிலிருந்து உபரி மதிப்பை சட்டப்பூர்வமாக திருடுவதற்கும் அப்பால் முதலாளிகள் பொது மக்கள் மடியிலிருந்தும் மற்றும் தங்களுக்குள் ஒருவர் மற்றவரிடமிருந்து லாபத்தையும் செல்வத்தையும் திருடுகிறார்கள்! பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் முதலாளித்துவ நலன்களுக்காக சட்டமியற்றும் முதலாளித்துவ கட்சிகள். முதலாளித்துவ வர்க்கத்தையும் அவர்கள் சார்பாக பணியாற்றும் ANC தோழர்களையும் நாம் தோற்கடிக்க வேண்டும்! சமுதாயத்தின் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு தொழிலாளர்கள் கட்டுப்பாட்டில்  இன, பாலியல் பாகுபாடற்ற சோசலிச அரசை நிறுவுவதும் உற்பத்தி செய்யப்படும் உற்பத்தி சாதனங்களின் உரிமையைக் கொண்டிருப்பதும் தான்!வைரஸ் நம்மை விட்டாலும் பட்டினி கொல்லும்!

24 பிப்ரவரி 2021 அன்று SAFTU பணி மறுப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களில் சேரவும்!

தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளால்  கட்டுப்படுத்தப்படும் அவர்களுக்குச்  சொந்தமான ஒரு சமுதாயத்திற்காக போராடுங்கள்!

ஒரு சோசலிச தென்னாப்பிரிக்கா, ஆபிரிக்கா மற்றும் உலகத்திற்காக போராடுங்கள்!

வெளியீடு :

சோசலிச புரட்சிகர தொழிலாளர் கட்சி(SRWP)

மோட்டேபாங் ஓபா ராலேக் (Motebang Oupa Ralake)

பொதுச் செயலாளர்

   

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *