பாக்யா அபேரத்னாவின் பாதுகாப்பிற்காகத் குரல் கொடுக்கும் ‘இடது குரல்’!

இந்த நாட்களில் சிங்கராஜா காட்டில் நடைபெற்று வரும் சுற்றுச்சூழல் அழிவுக்கு எதிராக சிராசா(Sirasa TV) தொலைக் காட்சி நிறுவனம் வழங்கிய “லட்சபதி”(‘Lakshapathi’) நிகழ்ச்சியின் போது அவர் தெரிவித்த கருத்துகள் குறித்து காவல்துறை மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் பாக்யா அபேரத்னேவை(Bhagya Abeyratna) கேள்வி எழுப்பியதை ‘இடது குரல்’ வன்மையாகக் கண்டிக்கிறது. நாட்டில் இடம்பெற்று வரும் காடழிப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அதன் பேரழிவை அம்பலப்படுத்துபவர்களை அரசாங்கம் வேட்டையாடுகிறது. தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதன் ஆதரவாளர்கள், நாடு பூராவும் காடுகளை அழித்து, மலைகள் மற்றும் ஆறுகளை அகழ்ந்து நிலத்தில் இருந்து மணலைப் தோண்டி எடுக்கிறார்கள்.இவையனைத்துக்கும்  கோத்தபாயாவின் ஆதரவு மிகக் குறைந்த தர அதிகாரிகள் வரை உள்ளது. இந்த சுற்றுச்சூழல் அழிவுக்கு எதிராக பேசும் அரசாங்க அதிகாரிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை மௌனமாக்குவதற்கான அச்சுறுத்தல்கள் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றன. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாக்யா போன்ற ஒரு பாடசாலை மாணவி காட்டிய வெளிப்பாடு சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது அரசாங்கத்திற்கும் பலத்த அடியாக இருந்தது.

சுலபமான இலாபத்திற்காக உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களும் தனிநபர்களும் சுற்றுச்சூழலை அழிப்பதை எதிர்த்து 2018 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் மாநாட்டில் 18 வயதான ஸ்வீடிஷ் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் ஆற்றிய உரையை இங்கே நினைவுபடுத்துகிறோம். அவரது உரையை அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் விமர்சித்தார். சுற்றுச்சூழல் அழிவுக்கு எதிரான பாக்யாவின் உரை இலங்கையின் அமெரிக்க கைப்பாவையான கோத்தபாயாவின் கூட்டாளிகளுக்கு ஒரு சவாலாக அமைந்துள்ளது. அவர் சுயமாகவே ட்ரம்பின் பாதையில் செல்கிறார். எனவே பாக்கியாவை மட்டுமல்ல, அவரைப் போன்ற பிற சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் மௌனமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். எனவே, பாக்யா போன்றவர்களைப் பாதுகாப்பது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான மற்றொரு நடவடிக்கையாகும். ஒவ்வொரு இடதுசாரி மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அனைவரும் அவளைப் பாதுகாக்க முன்வருமாறு ‘இடது குரல்’ வேண்டுகோள் விடுக்கிறது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *