தொழிற்சங்கங்கள் உச்சநீதிமன்றத்தில் 20 வது திருத்தத்திற்கு எதிராக போராடுகின்றன.

சிலோன் மெர்கன்டைல் ​​& ஜெனரல் சர்வீசஸ் யூனியன் (சி.எம்.யூ-CMU), ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பு மற்றும் ஏகேஸ்வர கோட்டெகோடா ஆகியோர் இணைந்து அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட 20 வது திருத்தத்திற்கு எதிராக ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளனர். மேலும் இலங்கை ஆசிரியர் சங்கமும் தனி மனு தாக்கல் செய்துள்ளது. 20 வது திருத்தத்திற்கு எதிராக இதுவரை 18 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்தத் திருத்தத்தைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய கூடுதல் நடவடிக்கைகளை ஆராய மற்ற தொழிற்சங்கங்களுடன் திங்கட்கிழமை 28 ஆம் தேதி கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளது.

மக்களின் இறையாண்மையை மீறுவதைப் போலவே தொழிற்சங்கங்களும் குறிப்பாக அவசரகால மசோதாக்களை அறிமுகப்படுத்துவதில் அக்கறை கொண்டுள்ளன. அவை பாராளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையுடன் ஒரே இரவில் நிறைவேற்றப்படலாம். இத்தகைய மசோதாக்கள் விவாதங்களுக்கோ அல்லது நீதித்துறை மறு ஆய்வுக்கோ போதுமான நேரத்தை இடமளிக்காது. நல் இணக்க(யஹபலனா)  அரசு உட்பட சமீப காலங்களில் அரசாங்கங்கள் உழைக்கும் மக்களின் நலன்களுக்கு எதிரான மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளை மீறும் பல்வேறு மசோதாக்களை அறிமுகப்படுத்த முயற்சித்தன. பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்(CTA)  ஒருங்கிணைந்த தொழிலாளர் சட்டம் மற்றும் ஈ.பி.எஃப்-EPF(ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி) ஆகியவற்றைப் பலவீனப்படுத்த  எடுத்த முயற்சிகள் ஒரு சில எடுத்துக்காட்டுகள். உழைக்கும் மக்களால் ஏற்பட்ட பாரிய அழுத்தம் காரணமாக இந்த முயற்சிகள் தோல்வியடைந்தன. ஆனால் அவசர மசோதாக்கள் இந்த இடத்தை முற்றிலும் மறுக்கும். 

எதிர்காலத்தில் இதுபோன்ற பல முயற்சிகளை தொழிற்சங்கங்கள் முன்னறிவிக்கின்றன. எம்.சி.சி-M.C.C.(மில்லினியம் சேலஞ்ச் கார்ப்பரேஷன்) ஒப்பந்தம் அரசாங்கத்திற்கும் M.C.C. க்கும் இடையில் கையெழுத்திட முன்மொழியப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட 20 ஆவது திருத்தம் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் ஜனநாயக விரோத முயற்சியாகும். ஏனெனில் அது அணிதிரட்டுவதற்கும் கருத்து வேறுபடுவதற்கும் உள்ள மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்துவதற்கான அனைத்து வழிகளையும்  இல்லாதொழிக்கிறது.

இந்த மனுக்களின் விசாரணை செப்டம்பர் 29 முதல் 5 உறுப்பினர் அடங்கிய உச்சநீதிமன்றக் கதிரை  முன் தொடங்கப்படும்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *