அவசர வேண்டுகோள்_ கட்டாய சுய தனிமைப்படுத்தலில் உள்ள மனித வலுத் தொழிலாளர்களின் நிலை

நான்ஒருமனிதவலுத்தொழிலாளி. எனக்குக்கொரொனாஏற்பட்டிருந்தால்நான்நன்றாகஇருந்திருப்பேன்என்றுநான்இப்போதுநினைக்கின்றேன். குறைந்ததுநான்அப்போதுவைத்தியசாலைஒன்றின்படிகளில்விழுந்துஅவர்கள்தந்ததைஉன்றுசமாளித்திருப்பேன். வேலையைப்பற்றிஇப்போதுஎமக்குச்சிந்திக்கக்கூடமுடியாது. எங்களின்விடுதியினைவிட்டுஎமக்குவெளியில்காலடிஎடுத்துவைக்கக்கூடமுடியாது. ஒவ்வொருநாளும்விடுதியில்ஒவ்வொருஅறைஅறையாகச்சென்றுநாம்மற்றவர்களிடம்உணவுகேட்கவேண்டியிருக்கின்றது. இப்போதுஅதிகமானவர்கள்கதவினைத்திறப்பதுமில்லை. அவர்களிடம்இருப்பதுஅவர்களுக்கேபோதாதநிலைகாணப்படுகின்றது. ஏனையவர்களையும்அவர்களால்எவ்வாறுகவனிக்கமுடியும்? என்னால்எனதுவீட்டுக்குக்கூடத்திரும்பிச்செல்லமுடியாதுஇருக்கின்றது. எங்களைஏற்றுக்கொள்ளயாரும்தயாராகஇல்லை. நிலைமைஇவ்வாறேதொடர்ந்தால்எனக்குநஞ்சுகுடித்துச்சாவதைவிடவேறுவழிஇருக்காது,” கட்டாய சுய தனிமைப்படுத்தலில் கட்டுநாயக்கவில் அவரிவத்தயில் சிக்கியிருக்கும் ஒரு மனிதவலுத் தொழிலாளர் குறிப்பிட்டது.

இலங்கையில் கொவிட் 19 இன் இரண்டாவது அலை எனக் கருதப்படும் தொற்றின் கராணமாக ஆயிரக்கணக்கில் கட்டாய தனிமைப்படுத்தல் மையங்களில் இருக்கும் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களும் மனித வலு ஊழியர்களும் மிகப் பாரதூரமான நெருக்கடி நிலைமைக்கு  முகங்கொடுத்து வருகின்றனர். மினுவாங்கொடயில் உள்ள பிரெண்டிக்ஸ் தொழிற்சாலையில் உருவாகிய மிகப் பெரிய கொத்தணியான இது கட்டுநாயாக்கவிலுள்ள ஏனைய சுதந்திர வர்த்தக வலயங்களுக்கும் வேகமாகப் பரவி வருகின்றது. இதற்கு அப்பால் இராணுவத்தினால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் 1000 தொழிலாளர்கள் உள்ளனர். அத்துடன் தமது விடுதிகளிலும் தங்குமிடங்களிலும் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறும் ஊழியர்கள் பணிக்கப்பட்டுள்ளனர். தங்குமிடங்களை விட்டுத் தொழிலாளர்கள் வெளியே வந்தால் விடுதி முகாமையாளர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிசார் விடுதி முகாமையாளர்கள் பொலிசாரினால் எச்சரிக்கப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், தொழிலாளர்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை வழங்கப்படாத காரணத்தினால் உணவு, மருந்துப் பொருட்கள் போன்ற அவசியமான பொருட்களைத் தொழிலாளர்கள் வாங்கிச் சேமித்து வைக்கவில்லை. இதனால் இவர்கள் மிகவும் அல்லலுறுகின்றனர். மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட சில பிரதேசங்களுள் கம்பஹா மாவட்டத்திலுள்ள கடான பிரதேச செயலகப் பிரிவு, அவரிவத்த, ஜயவர்தனபுர மற்றும் அமந்தொலுவ கிராமசேவையாளர் பிரிவுகள் மற்றும் வலன மற்றும் கொவின்ன பிரதேசங்கள் ஆகியவை அடங்குகின்றன.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தினுள் அமைந்துள்ள பல தொழிற்சாலைகளில் கொவிட் தொற்றுக்குள்ளான தொழிலாளர்களைக் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து இத்தொழிற்சாலைகளின் ஊழியர்கள் வேலைக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் விடுதிகளை விட்டு வெளியேறுவதற்கும் இவர்களுக்குப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தொழிலாளர்களுக்கான பொறுப்பினை ஏற்று அவர்களின் நலன்களைக் கவனிக்க எந்த அமைப்பும் முன்வரவில்லை. இவர்களினால் வேலைக்கு வரமுடியாமல் இருப்பதனை இவர்களின் தொழில் வழங்குனர்கள் இவர்களின் தவறாகப் பார்க்கின்றனர். வைரஸ் மிக வேகமாகப் பரவியுள்ள சில குறிப்பிட்ட தொழிற்சாலைகள் ஓரளவு நிவாரணப் பொருட்களை அவற்றின் ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது. அதேவேளை ஏனைய தொழிலாளர்கள் கைவிடப்பட்டுள்ளதுடன் தம்மைத்  தாமே கவனித்துக்கொள்ள அல்லது பட்டினி கிடக்க இவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.  

எங்களுக்குத் தெரிந்த கட்டுநாயக்கவையும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களையும் சேர்ந்த சுமார் 300 – 400 மனித வலுத் தொழிலாளர்களும் ஏனைய நாட் கூலித் தொழிலாளர்களும் தங்களின் வதிவிடங்களில் கட்டாய சுய தனிமைப்படுத்தலில் இருக்கின்றனர். ஓரிரண்டு வாரங்களுக்கு முன்னர் விடுதியில் அல்லது தங்குமிடத்தில் யாராவது தொற்றுக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டபோது, அவ்விடத்தினைச் சுற்றியுள்ள சகல விடுதிகளைச் சேர்ந்த அனைத்துத் தொழிலாளர்களும் சுற்றிவளைக்கப்பட்டு பஸ்களில் திணிக்கப்பட்டு நாடு முழுவதும் இராணுவத்தினால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு (அதாவது: களுத்தறை, தம்பதெனிய, பேராதனை) அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த நிலையங்களில் பலவும் துப்பரவற்றவையாகவும் அடிப்படை கொவிட் 19 பாதுகாப்புத் தராதரங்களைப் பின்பற்றாதவையாகவும் காணப்படுகின்றன இந்த மையங்களில் வைத்து தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்ட தொழிலாளர்கள் மாலபேயிலுள்ள நெவில் பெர்ணாண்டோ வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லை என அங்குள்ள தொழிலாளர்கள குறிப்பிட்டுள்ளனர்.

இப்போது, தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்ட வர்கள் மாத்திரமே சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படுகின்றனர். சுற்றியுள்ள இடங்களில் வசிப்பவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு வேண்டப்படுகின்றனர். அரசாங்க அதிகாரிகள் அவ்வாறு சுய தனிமைப்படுத்தலில் இருப்பவர்களின் வீட்டுக் கதவுகளில் ஸ்டிக்கர் ஒன்றினை ஒட்டி அவர்கள் சுய தனிமைப்படுத்தலின் கீழ் இருப்பதை அறிவிக்கின்றனர். அடிப்படைத் தேவைகளைக் கூடப் பூர்த்திசெய்வதற்கான வசதிகள் வழங்கப்படாது தொழிலாளர்கள் நான்கு சுவர்களின் பின்னாலும் கதவின் பின்னாலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலைகளின் கீழ் மனித வலு முகவர் தொழிலாளர்கள் பாதிப்புறு நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் இவர்களின் பராமரிப்புக்கான வகைப்பொறுப்பினைச் சாட்ட உத்தியோகபூர்வ அமைப்பு எவையும் இல்லாமல் இருக்கின்றன.

கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்தில் கட்டாய சுய தனிமைப்படுத்தலில் உள்ள மனிதவலுத் தொழிலாளர்கள் பின்வரும் வேண்டுகோளை விடுக்கின்றனர், நான் மனிதவலு முகவரிற்காகப் பணியாற்றுகின்றேன். எனது கணவர் நாட்கூலியாக வேலை செய்கின்றார். ஒன்று ஒன்றரை மாதங்களாக நாங்கள் இருவரும் வேலை செய்யவில்லை. எங்களுக்குப் பிழைக்க வழியில்லை. இதுவரை அரசாங்கத்திடமிருந்து எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. முன்னர் சங்கத்திடமிருந்து உணவுப் பொதி மட்டுமே கிடைத்தது


தமது விடுதியில் கட்டாய சுய தனிமைப்படுத்தலில் இருக்கும் ஆமந்தொலுவவைச் சேர்ந்த மனிதவலுத் தொழிலாளர்கள் குறிப்பிடுகையில், “விடுதியில் ஆண்கள், பெண்கள் நான்கு சிறுவர்கள் என நாங்கள் 20 பேர் இருக்கின்றோம். எங்களுக்கு உணவு இல்லை. எல்லாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. எங்களுக்கு வேலையும் இல்லை. எங்களுக்கு எப்படியாவது உதவி செய்யுங்கள்.” ஆனால் மற்றொரு தொழிலாளர் குறிப்பிடுகையில், யாரும் எங்களைப் பற்றிக் கவனமெடுப்பதில்லை! நாங்கள் செத்தோமா பிழைத்தோமா என்று பார்க்கக்கூட ஒருவருமில்லை.”

பிசிஆர் பரிசோதனையினை ஒரு தடவை கூடச் செய்யாத சகல தொழிலாளர்களுக்கும் பிசிஆர் பரிசோதனையினை மேற்கொண்டு பின்னர் அவர்களை வேலைக்கு அனுப்புமாறு முதலீட்டு ஊக்குவிப்புச் சபை மனித வலு முகவர்களைக் கேட்டுள்ளது. எவ்வாறாயினும், தம்மால் பிசிஆர் பரிசோதனையினை மேற்கொள்ள முடியாது என்றும் அவர்கள் மூடப்போவதாகவும் அவரிவத்தயிலுள்ள அவ்வாறான ஒரு முகவர் அதன் தொழிலாளர்களுக்குக் கூறியுள்ளது. எங்களுக்கு உண்பதற்குக் கூட உணவில்லை. எம்மால் எவ்வாறு பிசிஆர் பரிசோதனையினை மேற்காள்ள முடியும் எனத் தொழிலாளர்கள் மனவருத்தத்துடன் கேட்கின்றனர்.

பின்வரும் அவசரக் கோரிக்கைகளுக்கு பதிற்செயற்பாடாற்றுமாறும் தொழிலாளர்களின் மீது கொவிட் 19 ஏற்படுத்தியுள்ள தாக்கங்களுக்கு பதிற்செயற்பாடாற்றுமாறும் கீழே ஒப்பமிட்டுள்ள சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்கள் மற்றும் மனித வலுத் தொழிலாளர்களின் சார்பில் பணியாற்றும் நிறுவனங்களும் சங்கங்களும்  அரசாங்கத்தினையும் சுகாதார அமைச்சினையும் தொழில் அமைச்சினையும் கொவிட் 19 இனை ஒழிப்பதற்கான ஜனாதிபதி செயலணியினையுமு் முதலீட்டு ஊக்குவிப்புச் சபையினையும் அமைச்சு மட்ட செயலணியினைம்  தொழிற்சாலை உரிமையாளர்களையும் வேண்டுகின்றோம்.  

கட்டாய சுய தனிமைப்படுத்தலில் உள்ள தொழிலாளர்களுக்கு அவசர நிவாரணப் பொருட்களையும் மருந்துகளையும் வழங்கல். இற்றைவரை பெருநிறுவனங்களிடமிருந்தும் வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்தும் IFS டமிருந்தும் பெற்றுக்கொண்ட கொவிட் நிதியின் பட்டியல் இங்கே வழங்கப்பட்டுள்ளது.  இந்த நிதியில் சிலவற்றை இந்தத் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக அரசாங்கம் பயன்படுத்தவேண்டும் எனவும் இதுவரை இந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது பற்றிய விபரத்தினை வெளியிடவேண்டும் எனவும் நாம் அரசாங்கத்தினைக் கோருகின்றோம்.

-மனிதவலுத் தொழிலாளர்கள் பற்றிய தகவல்கள் உள்ளடங்கலாக சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள தொழிலாளர்கள் பற்றிய உடனடியான கணிப்பீட்டினை அல்லது தேவைகள் பற்றிய மதிப்பீட்டினை மேற்கொள்ளல்.

-மனிதவலுத் தொழிலாளர்கள் உள்ளிட்ட கொவிடினால் தங்கள் தொழில்களை இழந்த அல்லது தற்போது வேலை செய்ய முடியாதுள்ள சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்களுக்கு 10000 ரூபா வழங்குதல்.

– கட்டுநாயக்கவில் பணியாற்றும் மனித வலுத் தொழிலாளர்கள் உள்ளடங்கலாக அனைத்துத் தொழிலாளர்களுக்கும் பிசிஆர் பரிசோதனையினை மேற்கொள்ளல்

– கொவிட் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் சகல அரசாங்கத் தனிமைப்படுத்தல் நிலையங்களும் வைத்தியசாலைகளும் சர்வதேச தராதரங்களைக் கடைப்பிடிக்கின்றன என்பதை உறுதிப்படுத்தல்

– விடுதியில் அல்லது தொழிற்சாலையில் யாருக்காவது தொற்று ஏற்பட்டால் அல்லது தொற்றிற்கான அறிகுறிகளைக் காட்டினால் என்ன செய்வது, அரசாங்க பதிற்செயற்பாடு மற்றும் அவசர நிலைத் தொடர்புகள் உள்ளடங்கலாக- தொடர்பாடலின் கிரமமான பாய்ச்சலைப் பேணுதல். சகல தொடர்பாடலும் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பேணப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்தல்.

– தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட தொழிலாளர்கள், சுய தனிமைப்படுத்தலில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் அல்லது முழு அடைப்பின்போது வேலைக்குச் செல்ல முடியாதவர்களுக்கு நட்டஈடு வழங்கப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்தல்.

– முழு அடைப்பின் போது நட்டஈடு தொடர்பாக அடையப்பட்ட கூட்டுச் செயலணிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட் முத்தரப்பு உடன்படிக்கையினை வெளியிட்டு அமுல்படுத்தல்.

– தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு வேலைக்கு வருமாறு தொழிலாளர்கள் கேட்கப்படுகையில் அரசாங்க சுகாதார அதிகாரிகள் மூலம் பாதுகாப்பு ஒழுங்குவிதிகளை இறுக்கமாக அமுல்படுத்தல்.

ஒப்பமிட்டோர்:

 • இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம் (சிபிஇ)
 • இலங்கை தொழிற்சங்கங்களின் சம்மேளனம் (சிஎப்டியு)
 • சிலோன் இண்டஸ்டிரியல் வேர்கர்ஸ் யூனியன் (சிஐடபிளியுயு)
 • சிலோன் மேர்கண்டைல், இண்டஸ்டிரியல் அன்ட் ஜெனரல் வேர்கர்ஸ் யூனியன் (சிஎம்யு)
 • இலங்கை ஆசிரியர்கள் சங்கம் (சிடியு)
 • தபிந்து கலெக்டிவ இலங்கை, கட்டுநாயக்க
 • லிபரேசன் மூவ்மென்ட்
 • நேசனல் யூனியன் ஒப் சீ பெயாரர்ஸ் இன் சிறிலங்கா (என்யுஎஸ்எஸ்)
 • புரொக்ரசிவ் வுமன் கலெக்டிவ்
 • ஸ்டேன்ட்அப் மூவ்மன்ட் லங்கா, கட்டுநாயக்க
 • ரிவொலூயூசனரி எக்சிஸ்டென்ஸ் போர் ஹியூமன் டிவலப்மன்ட (ரெட்) கட்டுநாயக்க
 • சரம்பிமனி கேந்திரய, சீதுவ
 • புரொக்ரசிவ் வுமன்ஸ் கலெக்டிவ்
 • யுனைடட் பெடரேசன் ஒப் லேபர் (யுஎப்எல்)

மனிதவலுத் தொழிலாளர்களின் வேண்டுகோள்கள்

https://drive.google.com/file/d/1pWcHK_s7Djw1fOrzaXH57FSGjCha0vJy/view?usp=sharing

https://drive.google.com/file/d/1Bs4v_nygNB8a75efiaeD0OZX_fUKPLFJ/view?usp=sharing

https://drive.google.com/file/d/1Bez_KP1spMSR6BS9UMX3MsbmTBjnac2O/view?usp=sharing

https://drive.google.com/file/d/1BsdVH_nOQXwlCZf9QquKqxam1zG5GSuU/view?usp=sharing https://drive.google.com/file/d/1Bh4GL1s09HhvGt9f0CBWtR71a7uRsb1j/view?usp=sharing

Related posts

Leave a Comment