யாழ்ப்பாணக் கலாச்சார நிலைய மண்டபத்தை இராணுவம் கையேற்றல்: தமிழ்க் கலாச்சார மறுலர்ச்சியை சிங்கள இராணுவம் முன்னெடுப்பதா?

கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இந்திய அரசு, இலங்கை அரசு மற்றும் யாழ்ப்பாணம் மாநகராட்சி ஆகியவற்றுக்கு இடையேயான முத்தரப்பு ஒப்பந்தந்தின் கீழ் ரூ. 2000 மில்லியன் பெறுமதியான யாழ்ப்பாணக் கலாச்சார நிலைய மண்டபம்  பரிசளிப்பாக கட்டிக் கொடுக்கப்பட்டிருந்தது. கட்டிடத் திறப்பு விழா இடம் பெற்று ஆறு மாதங்களாகியும் பராமாரிப்புக்கான நிதி இல்லாதபடியால் அது செயற்படவில்லை. ஆரம்பம் முதல் இறுதி வரை இது ஒரு மோசடியான திட்டமிடல் ஆகும். நிதியைச் சாக்காக வைத்து அதனை மூடி வைத்திருந்த இலங்கை அரசு திடீரென ஆச்சரியமூட்டும் வகையில் கலாச்சார மண்டபத்தை இராணுவம் செயற்படுத்துவதற்கான நிதியை ஒதுக்கியுள்ளது.


தேசிய பாரம்பரிய கலை மற்றும் கிராமியக் கலை மேப்பாட்டு அமைச்சின் செயலாளர் எஸ்.டி.கோடிக்காரா புத்தசாசன மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் செயலாளருக்கு எழுதிய 26 ஜனவரி 2021 திகதியிடப்பட்ட கடிதத்தில்  ‘தொழில்நுட்ப தேவைகளுக்கான முன்னுரிமையைக் கருத்தில் கொண்டு யாழ்ப்பாணத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள யாழ்ப்பாண கலாச்சார நிலைய மண்டபத்தை யாழ் மாநகர சபை பொறுப்பெடுக்கத் தயாராகும் வரை அதன் நிர்வாகத்தை ‘நெலும் பொக்குன தியேட்டரின்’ தலைமை நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கும் படி பரிந்தரைக்கப்படுகிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கலாச்சார நிலையத்தை பராமரிப்பதற்கு அரசாங்கத்திடம் நிதி இருக்கிறதென்றால்  அதனை செய்வதற்கு மாநகராட்சிக்கு ஏன் பணம் கிடைக்கவில்லை என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் கேட்டார். மேலும்  ”புத்தசாசன மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சகம் தமிழ் கலாச்சாரத்துடன் என்ன விதத்தில் தொடர்புடையது? தமிழ் என இருப்பவை யாவற்றையும் சிங்களத்திற்கே உரியதாக்குவதே அவர்களின் கடந்த கால வரலாறாகும்.  இந்தியா இதனையிட்டு முன்னெச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும்” என கோபத்துடன் கேட்டார் ஒரு தமிழ் ஆசிரியர்.


எம்மைக் கொல்வதனைத் தவிர எமது கலாச்சாரத்தைப் பற்றி இராணுவத்திற்கு வேறென்ன தெரியும் எனக் கேட்டார் முன்னர் குறிப்பிட்ட  யாழ்ப்பாண நபர். யாழ்ப்பாணம் – பூநகரி கடல் பாதையைச் சுட்டிக் காட்டினார். அங்கேயுள்ள புதிய சங்குப்பிட்டி பாலத்தின் வடக்கே ஒரு சோதனைச் சாவடி உள்ளது. அதன் பெயர் ஆங்கிலத்தில்(Check Point) எழுதப்பட்டுள்ளது. தமிழர்களை வேலைக்கு அமர்த்தாமலும் சம்பளம் கொடுத்து தமிழில் மொழி பெயர்க்காமலும் கூகுள் மொழிபெயர்ப்பை பயன்படுத்தியுள்ளனர். அதனால் அடையாளப் பலகையில் “சோதனைப் புள்ளி”(Check Pulli) என்று எழுதப்பட்டுள்ளதைப் பார்த்து நாம் சிரித்தாலும் அது கலாச்சார ஆவணங்களின் பதிவுகள் தொடர்பில் நாம் எதிர்கொள்ளும் ஒரு ஆபத்தாகும் என ‘சாலை மேம்பாட்டு ஆணையத்தின்'(RDA) பொறியியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

புதிய கலாச்சார மண்டபத்தில் கண்காட்சிகளின் தலைப்புகளை கூகுள் அர்த்தங்களா அலங்கரிக்கப் போகின்றன? மூடப்பட்டுள்ள விமான நிலையம் போன்று உதவும் நோக்குடன் இந்தியா வழங்கும் எதனையும் சீண்டும் வகையில் துணிச்சலாக செயற்படும் இலங்கையை எச்சரிக்க இந்தியா ஏன் தயங்குகிறது? பிரதமர் நரேந்திர மோடி இன்னொரு நெவில் சேம்பளின்( Neville Chamberlain)போல இந்தியாவின் காலடியில் ஒரு சில கி.மீ. தொலைவில் உள்ள தீவுகளில் சீனா கால் பதிக்க இடம் வழங்கப் படுவதைப் பார்த்துக் கொண்டு மௌனமாக இருக்கப் போகிறாரா? பிரதமர் மோடி விழித்தெழ 01 செப்டம்பர் 1939ல் நெவில் சேம்பளின் சமாதானக் கொள்கையைப் பயன்படுத்தி அடோல்வ் கிட்லர்(Adolf Hitler ) போலந்தை ஆக்கிரமித்த போது நடந்ததைப் போல ஒரு பகிரங்க சவால் தேவையா? மோடி விழித்தெழ என்ன நடக்க வேண்டும்?


நமது மண்ணில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒரு அணுசக்தி மோதல் பற்றி அஞ்சிப் பீதியுடன் வாழும் பல தரப்பட்ட  யாழ் குடி மக்களின் நியாயமான கேள்விகளே மேற் குறிப்பிட்டவையாகும்.

ஜக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையை அதன் தலைவரை அலட்சியப் படுத்துவது,  அமெரிக்க ஜனாதிபதியை அவமதிப்பது, இலங்கைத் தமிழர்களை தாக்குவது மற்றும் இந்தியத் தமிழ் மீனவர்களை கொல்வது போன்ற பைத்தியகாரத்தனமான செயல்களை இலங்கை அரசாங்கம் செய்து வருகிறது. சிங்கள அரசாங்கத்தின் முரட்டுத்தனத்தை ஏற்றுக் கொள்வதற்கும் அதன் பைத்தியக்காரத்தனத்தை புறக்கணிப்பதற்கும் உலகம் தயாராக இல்லை. இது தமிழர்களாகிய எமக்கு இருண்ட வானத்தில் தோன்றும் ஒரு ஒளிக்கீற்றுப் போன்றதாகும். இலங்கையின் பயங்கரமான ஒரு பகுதி நீதிக்குத் தப்பும் வாய்ப்பு உள்ளது. முற்றிலும் அழுகிய இலங்கை மேலும் மேலும் சிதைவடையும் போது நீதியிலிருந்து தப்ப முடியாது. அத்தகைய ஒரு செயற்பாடு அதிக மரணங்களை ஏற்படுத்தாது என நம்புகிறேன். (யாழ்ப்பாண நிருபர்)

(Source: COLOMBO TELEGRAPH – FEBRUARY 10, 2021 )

Related posts

Leave a Comment