இதுவரை உலக மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பகுதியினருக்கு கியூபா தனது சுகாதர சேவையை வழங்கியுள்ளது.

“கடந்த ஆறு தசாப்தங்களில் கியூபா – வெளிநாட்டு மருத்துவ ஒத்துழைப்பின் கீழ் அதன் பணியாளர்கள் உலகில் 1,988பில்லியன் மக்களுக்கு உதவியுள்ளனர். இது ஏறக்குறைய உலக மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பங்காகும்” என மருத்துவ ஒத்துழைப்புக்கான மத்திய பிரிவின்(Central Unit for Medical Cooperation-UCCM) இயக்குனர் டாக்டர் ஜார்ஜ் டெல்கடோ புஸ்டிலோ(Dr Jorge Delgado Bustillo) உறுதிப்படுத்தியுள்ளார்.

கொவிட் 19 தொற்று நோயினால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் 66 நாடுகளில் சுமார் 30,407க்கும் மேற்பட்ட வைத்திய நிபுணர்கள் பணிகளில் உள்ளனர். அவர்கள் நிரந்தர மருத்துவப் படைப்பிரிவிலும், இராணுவப் படையணியிலிருந்தும் அனுப்பப்படுகின்றனர்.

அரசாங்கங்களின் அழைப்பின் பேரில் இந்த மருத்துவப் படையணி முதன் முறையாக  ஐரோப்பாவில் இத்தாலி நாட்டின் லம்பாடி மற்றும் டூரின் நகரங்களுக்கு வந்து இறங்கியது என்றும் அத்துடன் அன்டோரா ராஜ்ஜியம், டசின் கணக்கிலான லத்தீன் அமெரிக்க நாடுகள், கரீபியன், ஆபிரிக்கா, ஆசியா, மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் சேவைகளில் உள்ளதென்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். 

மேலும் ஏஸ்.ஏ.ஆர்.எஸ்.(SARS-CoV-2)ஐ எதிர்த்துப் போராடுவதற்காக உருவாக்கப்பட்ட 56 படையணிகளில் தற்போது செயற்பாட்டில் உள்ள 26 பிரிவுகளில் சுமார் 2,500 தொண்டர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இப்படியான சுகாதார அவசரநிலைக்கு கியூபா முன்னிலை வகிப்பது இது முதற் தடவையல்ல என்பதை உறுதிப்படுத்திய UCCM இயக்குனர்,  2005ல் பாகிஸ்தான் நிலநடுக்கம் 2010ல் ஹைட்டி (Haiti) நிலநடுக்கம் மற்றும் அதன் காலரா நோய்த் தொற்றின் போது கியூபா மருத்துவர்களே பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் சென்று நோயை அடையாளம் கண்ட முதல் நபர்களாகும் என்பதையும் நினைவுபடுத்தினார்.

2014ஆம் ஆண்டில் எபோலா(Ebola) தொற்று நோயின் போது சியாரா லியோன், லைபீரியா மற்றும் கினியா கோனக்கிரி ஆகிய நாடுகளில் எமது தொழில் வல்லுனர்கள் 265 பேர் இருந்ததாகவும் அதே வேளை கியூபாவிலிருந்து மேலும் 12,000 தன்னார்வலர்கள் அந்தப் பணியை நிறைவேற்றத் தயாராக இருந்தனர் எனவும் அந்த அதிகாரி அழுத்திக் கூறினார்.

அவரவரின் சுயேச்சையான முடிவின் காரணமாக தீவில் உள்ள ஆயிரக்கணக்கான சுகாதார நிபுணர்கள் எந்த வகை வற்புறுத்தலும் இல்லாமல் மிகவும் கடினமான சூழ்நிலைகளில் மிகத் தொலை தூர நாடுகளில் பணியாற்றுவதற்குத் தாங்களாகவே முன் வருகிறார்கள் ன்பதையும் டாக்டர் டெல்கடோ புஸ்டிலோ குறிப்பாகத் தெரிவித்தார்.

வரலாற்றில் இதுவரை பதியப்படாத மிகப் பெரிய, 9.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த சிலி நாட்டின் தெற்கு நகரமான வால்டியாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ எமது அவசரகாலப் படையணி சென்ற 1960ஆம் ஆண்டிலிருந்து ஏனைய நாடுகளுடனான சகோதர உறவு எமக்கு இருந்து வருகிறது.

மூன்று ஆண்டுகள் கழிந்து பிரான்சுடனான காலனித்துவ எதிர்ப்புப் போர் முடிவடைந்து சுதந்திரம் அடைந்திருந்த அல்ஜீரிய மக்கள் ஜனநாயகக் குடியரசுக்கு நிரந்தர படையணிகளை அனுப்பியதன் மூலம் அதிகாரபூர்வமான கியூபா மருத்துவ ஒத்துழைப்பு தொடங்கியது.

அன்றிலிருந்து 150க்கும் மேற்பட்ட நாடுகளில் 420 000க்கும் அதிகமான கியூபா சுகாதார நிபுணர்கள் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

(மூலம்:- MR Online | Cuba has assisted almost one third of the world’s population in health care )

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *