இடதுசாரிக்குரல்’ முதலாளித்துவ கூட்டரசாங்க அரசியலுக்கு எதிராக கட்டியெழுப்பப்பட்ட ‘நவசமசமாஜ’ அரசியலின் நான்கு தசாப்தங்களுக்கும் மேற்பட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் அரசியல் குழுமமாக ‘இடதுசாரிக்குரலையே’ கருத வேண்டியுள்ளது ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்கவின் காலடியில் புதைந்த விக்கிரமபாகுவின் அரசியலில் இருந்து உடைந்த சமசமாஜ கட்சியின் மரபுரிமையான ‘நவசமசமாஜ’ அரசியல் மரபுரிமையை இடதுசாரிக் குரலே முன்னெடுத்துச் செல்கிறது. இடதுசாரிகளின் ஐக்கியத்தையும் உழைக்கும் மக்களின் ஆட்சி அதிகாரத்தையும் பற்றிய நம்பிக்கையை முன்னகர்த்தும் அரசியல் இயக்கம் இடதுசாரிக் குரலாகும். இடதுசாரிகளின் ஐக்கியத்தையும் உழைக்கும் மக்கள் சக்திபற்றியும் உள்ள நம்பிக்கையை முன்னகர்த்திச் செல்லும் இடதுசாரி அரசியல் இயக்கமே அது. நான்காவது சர்வதேசத்தின் பூரண அங்கத்துவத்தை உரித்தாகக் கொண்ட ‘இடதுசாரிக் குரல் ” சர்வதேச ஐக்கிய போராட்டம் பற்றி நம்பிக்கை வைக்கும் இடதுசாரி இயக்கமாகும்.