பெரு நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் வெற்றி

பெரு நாட்டில் ஜூன் 6 இடம் பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் பெட்றோ காஸ்டிலோ வெற்றி பெற்றுள்ளார். இருப்பினும், முன்னாள் வலதுசாரி ஜனாதிபதி கெய்கோ புஜிமோரி முடிவுகளை மறுத்து, வாக்குகளை மறுபரிசீலனை செய்ய பெருவியன் தேசிய தேர்தல் நடுவர் மன்றத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த சூழ்நிலையை எதிர்கொண்டு, ஆயிரக்கணக்கான காஸ்டிலோவின் ஆதரவாளர்கள் லிமாவில் உள்ள பிளாசா சான் மார்ட்டினில் கூடி, தேர்தலின் இறுதி முடிவுகளை விரைவில் கோரினர். காஸ்டிலோ தனது ஆதரவாளர்களை அமைதியாக இருக்கவும் இறுதி அறிவிப்புக்காக காத்திருக்கவும் வலியுறுத்தினார்.

உழைக்கும் மக்கள் வேட்பாளர் காஸ்டிலோவின் வரலாற்று வெற்றியைக் கொண்டாடும் விதமாக கோஷங்களை முழக்கமிட்ட காஸ்டிலோவின் ஆதரவாளர்கள் நேற்று இரவு கட்சி தலைமையகம் அருகே திரண்டனர். தேசிய தேர்தல் செயல்முறை அலுவலகத்தின் (ONPE) உத்தியோகபூர்வ எண்ணிக்கையின்படி, எண்ணப்பட்ட வாக்குகளில் காஸ்டிலோ 50.204%, புஜிமோரி 49.796% வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த காஸ்டிலோ 51 வயதான ஆசிரியர், எதிர்பாராத விதமாக ஜனாதிபதி பதவிக்கு வந்தவர். காஸ்டிலோவுக்கு வாக்களித்த மக்கள் நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *